அஜித் படத்தில் நடித்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் – ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ.

0
1241
sujitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் ஸ்டாலின், குமரன், சுஜித்ரா, வெங்கட் முல்லை என்று பலர் நடித்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த தொடரில் நடித்த வந்த நடிகை அஜித்துக்கு தங்கையாகவே நடித்து உள்ளார். அது வேறு யாரும் இல்லை பிரபல நடிகை சுஜிதா தான். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் என்ற கதாபத்திரத்தில் நடிகை சுஜித்தா நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
பூவிழி வாசலிலே படத்தில் நடித்த குழந்தை இந்த நடிகையா ? புகைப்படம் உள்ளே -  Tamil Behind Talkies

சுஜிதா கேரளாவை சேர்ந்தவர். இவருக்கு ஒரு தங்கையும், ஒரு அண்ணனும் உள்ளார்கள். அவர் அண்ணனுடைய பெயர் சூரிய கிரன். இவர் சினிமா திரைப்பட இயக்குனர் ஆவார். அதுமட்டும் இல்லாமல் இவர் பல படங்களில் நடித்து உள்ளார். மேலும், சூரிய கிரன் சமீபத்தில் தெலுங்கு பிக் பாஸில் கூட கலந்து கொண்டார்.சுஜித்தா அவர்கள் பிறந்து, வளர்ந்தது எல்லாம் கேரளாவில் தான். இருந்தாலும் இவர் தற்போது சென்னையில் தான் வசித்து வருகிறார். இவர் முதன் முதலாக சினிமாத் துறையில் குழந்தை நட்சத்திரமாக தான் அறிமுகமானார்.

இதையும் பாருங்க : இல்ல, ரோஜா மாதிரி மணக்கும் – கருமம், கருமம் – இந்த கேள்விக்கு கூடவா பதில் அளிப்பாங்க – வைரலாகும் வீடியோ.

- Advertisement -

அதுவும் 41 நாள் குழந்தையாக இருக்கும் போது. சுஜிதா, தமிழ் பாக்கியராஜ் நடிப்பில் வெளியான முந்தானை முடிச்சு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.அதே போல இவர் தெலுங்கில் கூட குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதே போல சத்யராஜ் நடிப்பில் வெளியான பூவிழி வாசலிலேயே படத்திலும் நடிகை சுஜிதா குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் முந்தானை முடுச்சு, பூவிழி வாசலிலே இரண்டு படத்திலும் நடிகை சுஜிதா ஆண் குழந்தையாக தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் வாலி படத்தில் தான் அஜித்துக்கு தங்கையாக நடித்து இருப்பார். அது போக பல்வேறு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தோழி, தங்கை, அக்கா என்று பல விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் சுஜிதா.

-விளம்பரம்-
Advertisement