அட , பாண்டியன் ஸ்டோர்ஸ்ஸின் இந்த இரண்டு நடிகைகளுக்கும் இன்று ஒரே நாளில் பிறந்தநாள்.

0
1763
pandian
- Advertisement -

கொரோனா பிரச்சனை காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் எல்லாம் ரத்தாகி இருந்தது. இருப்பினும் இடையில் சினிமாவின் போஸ்ட ப்ரொடக்சன் பணிகள் மட்டும் அனுமதிப்பட்டிருந்த நிலையில் சின்னத்திரை தொடர்களை பல கட்டுப்பாடுகளுடன் 60 பேர் மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் சின்னத்திரை ஷூட்டிங் அனைத்தும் துவங்கப்பட்டது.

-விளம்பரம்-

ஆனால், சென்னையில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமானதால் மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. சினிமா ஷூட்டிங் இல்லாததால் தற்போது ரிலீஸ் ஆக இருந்த படங்கள் அனைத்தும் OTTயில் வருகிறது.இப்படி ஒரு நிலையில் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை சீரியல்கள் மீண்டும் துவங்கப்பட்டது. அந்த வகையில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.

இதையும் பாருங்க : என் உழைப்பை வைத்து பணத்தை மென்கிறார்கள். சிவகார்த்திகேயனை மறைமுகமாக தாக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன.

- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் சீரியல்களில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் ஒன்று. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் ரங்கநாதன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். சமீபத்தில் இந்த சீரியல் 300 அத்தியாயங்களை வெற்றிகரமாக கடந்து உள்ளது. இதை கொண்டாடும் விதமாக விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 300வது நாள் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை பிரம்மாண்ட அளவில் சமீபத்தில் நடைபெற்றது.

இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியில் நடித்து வரும் ஹேமா ராஜ் குமார் மற்றும் சுஜிதா இருவருக்குமே இன்று (ஜூலை 12) ஒரே நாளில் பிறந்தநாள். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் படக்குழுவில் இவர்களது பிறந்தநாள் கொண்டாடாட்டது. மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்களும் இவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement