அவள தப்பா நெனச்சிகிட்டோம் – சித்ரா குறித்த மனம் திறந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா.

0
52449
chitra
- Advertisement -

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். விஐய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. அந்த வகையில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் எத்தனை ஜோடிகள் நடித்து வந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்றால் கதிர்- முல்லை ஜோடிதான். இதில் கதிராக நடிகர் குமரனும், முல்லையாக நடிகை சித்ராவும் நடித்து வந்தனர்.

-விளம்பரம்-
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் டீம்

இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து முழுமையாக பல இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சித்ரா.இப்படி ஒரு நிலையில் நடிகை சித்ரா ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ரா இறந்து இத்தனை மாதங்கள் ஆனாலும் அவருடன் நடித்த பலரும் மறவாமல் தான் இருந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் சித்ரா குறித்து அவருடன் நடித்த சுஜிதா பேசியுள்ளார்.

இதையும் பாருங்க : போலீஸ் பாதுகாப்பு அளிக்க முன் வந்தும் அதை மறுத்துள்ள சித்தார்த் – காரணத்தை கேட்டால் மறுபடியும் பாராட்டுவீங்க.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர், பாண்டியன் ஸ்டோர் சீரியலை மிகவும் கொண்டாடியது சித்ரா தான். சீரியலில் நடித்த போது நாங்கள் அவ்வளவு விஷயம் பேசுவோம். ஆனால், நிச்சயதார்த்தம் பற்றி யாரிடமும் அவள் சொல்லவில்லை. கொரோனா நேரம் என்பதால் 50 பேருக்கு மேல் கூட கூடாது என்பதால்தான் கூப்பிடவில்லை என்று சாரி கேட்டாள்.அதன்பின்னர் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து கொள்கிற தகவலையும் சொன்னால். அவளுடைய திருமணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்று மொத்த சீரியல் டீமும் நிறைய பேசி வைத்திருந்தோம்.

ஆனால், கோவிட் பிரச்சனையால் ஒருத்தருடன் இன்னொருத்தர் நெருங்கி பழகி கூடி பேசுவதை குறைத்துக் கொண்டோம். அதனால் சித்ராவின் மனநிலையை சரியாக கணிக்க முடியவில்லை. ஒருவேளை அவரிடம் மனம் விட்டு பேசி இருந்தால் அவருடைய பாரம் குறைந்து இருக்கும். அவள் சந்தோஷமாக இருக்கா என்று நாங்கள் தப்பா நினைச்சு விட்டோம். தப்பான ஒருத்தரை வாழ்வில் தேர்வு செய்து விட்டோம் என்று தெரிந்தால் உடனே அதிலிருந்து விலகி வந்து பிடித்த மாதிரி வாழ்வது தான் சரியாக இருக்கும் அந்த தெளிவு சித்ராவிடம் இல்லை அவள் அவசரபட்டால்.

-விளம்பரம்-

Advertisement