பணத்தை கேட்டு மிரட்டும் கடன்காரர்கள், தவித்து நிற்கும் தங்கமயில் அம்மா, சரவணன் எடுக்கும் முடிவு-பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
236
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் இருப்பது “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2”. இந்த சீரியலின் முதல் பாகம் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. கடந்த ஆண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் நிறைவடைந்தது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. இரண்டாவது சீசனில் அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

மேலும், முதல் சீசனில் அண்ணனாக நடித்த ஸ்டாலின் தற்போது அப்பாவாக நடிக்கிறார். ஸ்டாலினுக்கு மனைவியாக நிரோஷா நடிக்கிறார். மேலும், இவர்களுடைய மகன்களாக விஜே கதிர், வசந்த், ஆகாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். சீரியலில் தந்தை பாண்டியனுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். பாண்டியன் பிள்ளைகளை தன்னுடைய கட்டுக்கோப்பில் வளர்த்து வருகிறார். இதனால் இவர் பெருமிதமாக இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் பாண்டியனின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மகன்களுக்கு எதிர்பாராத விதமாக திருமணம் நடந்து விடுகிறது.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இதனால் பாண்டியன் ரொம்பவே மனம் உடைந்து விடுகிறார். அதோடு மூத்த மகன் சரவணனுக்கு திருமணம் ஆகவில்லை என்று வீட்டில் எல்லோருமே அவருக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக சரவணனுக்கு சம்மந்தம் பேசி முடிக்கப்படுகிறது. தங்க மயிலை தான் சரவணன் திருமணம் செய்ய இருக்கிறார். தாங்கள் வசதியான குடும்பம் என்று பொய் சொல்லி தங்கமயில் வீட்டில் திருமணம் செய்ய இருக்கிறார்கள் . திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தங்கமயில்-சரவணன் திருமணம்:

கடந்த வாரம் எபிசோட்டில் திருமணத்திற்கான மொத்த கல்யாண செலவையும் நினைத்து பாண்டியன் பயந்து கொண்டிருந்தார். இன்னொரு பக்கம், கடனை திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் கல்யாணத்தை நடத்த விடமாட்டோம் என்று கடன்காரர்கள் தங்கமயிலின் அம்மா, அப்பாவிடம் சண்டை போட்டார்கள்.
ஒரு வழியாக அதை சமாளித்து விட்டார்கள். பின் திருமணத்திற்கான நிகழ்வு சிறப்பாக சென்றது. அப்போது மணப்பெண்ணின் நகைகளை எடை போட்டு பார்க்க வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டு சொந்த பந்தங்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். இதைக் கேட்டு தங்கமயில் மயக்கம் போட்டு விடுகிறார்.

-விளம்பரம்-

சீரியல் ட்ராக்:

காரணம், அவர் இடம் இருக்கும் நகை எல்லாம் போலி. இதை மறைத்து தான் திருமணம் செய்து வைக்கிறார்கள். நல்லபடியாக திருமணமும் முடிகிறது. இப்படி இருக்கும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், சரவணன்- தங்கமயில் இருவரும் மறு வீட்டிற்காக தங்கமயில் வீட்டிற்கு சென்று இருக்கிறார்கள். அப்போது அவருடைய அம்மா எல்லா நகைகளை போட்டு வந்து வீட்டில் வைத்து விடு என்று சொல்கிறார். ஆனால், சரவணன் அக்கா மறு வீட்டிற்கு எதுக்கு இந்த நகை என்று கழட்டி வைத்து விடுகிறார்.

சீரியல் ப்ரோமோ:

அதன்பின் கடன் கொடுத்தவர்கள் தங்கமயில் அம்மா, அப்பாவை டார்ச்சர் செய்கிறார்கள். இதை அறிந்த சரவணன், திருமணத்திற்கு நீங்கள் தங்க மயிலுக்கு போட்ட நகை எல்லாம் அடகு வைத்து கல்யாணம் பணத்தை கொடுத்து விடுங்கள் என்று சொன்னவுடன் எல்லோருமே அதிர்ச்சியில் நிற்கிறார்கள். இனி வரும் நாட்களில் தங்க மயிலுக்கு போட்ட நகை போலி என்ற உண்மை தெரிய வருமா? தங்கமயில் வீட்டின் குடும்பத்தை சரவணன் காப்பாரா? இதெல்லாம் பாண்டியன் கண்டுபிடிப்பாரா? போன்ற விறுவிறுப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement