இரவு 11 மணி வரை டீ கடையில் வேலை.! அம்மாவுக்கு உதவும் இளம் நடிகர்.! புகைப்படம் உள்ளே

0
1539
Parava-movie

சினிமாவில் பல நடிகர் நடிகைகள் பல இன்னல்களை தாண்டியே ஒரு அங்கீகாரத்தை பெறுகின்றனர். இன்று முன்னணி நடிகர்கள் என்று பெயர் பெற்றவர்கள் கூட சினிமாவில் நடிக்க வரும் முன்னர் நாம் சிந்தித்துக் கூட பார்க்கமுடியாத வேலைகளை செய்திருக்கின்றனர்.

govindan

- Advertisement -

முன்னணி நடிகர்களுக்கே இந்த நிலை என்றால் சினிமாவில் உள்ள துணை நடிகர்கள், மற்றும் சிறு சிறு வேடங்களில் நடிக்கும் கலைஞர்களை பற்றி சற்று சிந்தித்து பாருங்கள். அந்த வகையில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்த ‘பரவ’ என்ற படத்தில் நடித்த கோவிந்த் என்ற பையன் ஒரு டீ கடையில் தனது அம்மாவிற்க்கு உதவியாக பணி புரிந்து வந்தவராம்.

ஒரு சமயம் ‘பரவ’ படத்தின் இயக்குனர் சௌபிநிக்கா ,கேரளாவில் உள்ள ஒரு டீ கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார். இதனால் தான் சென்றுகொண்டிருந்த மிதிவண்டியை நிறுத்திய போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளார். உடனே அந்த டீ கடையில் இருந்த பையன் ஒருவன் ஓட்டிவந்து சௌபிநிக்காவை தூக்கி விட்டுள்ளார். அதன் பின்னர் அந்த பையனை பார்த்து படத்தில் நடிக்கிறாயா என்று சௌபிநிக்கா கேட்டுள்ளார். அதன் பின்னரே கோவிந்த் என்ற அந்த பையனுக்கு ‘பரவ’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

-விளம்பரம்-

parava

“கோவிந்த், 10 வகுப்பு படிக்கும் போதே பள்ளி முடிந்து விட்டு நேராக டீ கடைக்கு வந்து எனக்கு உதவியாக இருப்பான். இரவு 11 மணி வரை ஆகிவிடும். பின்னர் தூங்கி எழுந்து விட்டு மீண்டும் பள்ளிக்கு சென்றுவிடுவான்” என்று கோவிந்தின் அம்மா சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Advertisement