எந்த பாலம் கட்ட மண்டபத்தை இடித்தார்களோ அதே பாலத்தில் இன்று குவிந்த கூட்டம். இதான் கேப்டன் சம்பாதித்த சொத்து.

0
577
- Advertisement -

மக்கள் மத்தியில் என்றென்றும் கேப்டனாக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் நடிகர், அரசியல்வாதி என்பதை தாண்டி ஒரு நல்ல மனிதர் என்றே சொல்லலாம். புரட்சி கலைஞர் என்று பலராலும் அழைக்கப்பட்டவர். தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழியிலும் நடிக்காத ஒரே நடிகர் விஜயகாந்த். ஏழை, உதவி கேட்டு வருபவர்கள் என அனைவரையும் சமமாக பார்த்து அவர்களுக்கு உணவளித்து மகிழ்ந்தவர். வளரும் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து உதவியவர்.

-விளம்பரம்-

இப்படி பல உதவிகளை செய்த இவர் தேமுதிக என்ற கட்சியை துவங்கி அரசியலில் குதித்தார். 2000 ஆண்டில் அவருடைய ரசிகர் மன்றத்திற்கு கொடி அறிமுகப்படுத்தப்பட்டு 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியும் பெற்றார். முன்னாள் முதலமைச்சர்கள் ஆன கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்தில் பிரபலமாக இருந்த போது அவர்களுக்கு எதிராக விஜயகாந்த் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார்.

- Advertisement -

விஜயகாந்த் மண்டபம்:

குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உடன் விஜயகாந்த் நல்ல புரிதலில் இருந்தாலும் இருவரையும் ஒரு சம்பவம் பிரித்தது. அது என்னவென்றால், சென்னை கோயம்பேடு பகுதியில் விஜயகாந்த்திற்கு சொந்தமாக ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபம் ஒன்று இருந்தது. தற்போது அது தேமுதிக தலைமை அலுவலகம் இருக்கிறது. அதே பகுதியில் தான் அந்த மண்டபம் இருந்தது. கோயம்பேடு 100 அடி சாலையில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மண்டபம் அமைந்திருந்தது.

விஜயகாந்த் மண்டபம் இடிக்கப்பட்டது:

அந்த இடம் அரசுக்கு தேவைப்படுவதாக கூறி மத்திய தேசிய நெடுஞ்சாலை துறையினர் விஜயகாந்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள். இது தொடர்பாக விஜயகாந்த் வழக்கு நடத்திருந்தார். ஆனால், அதில் தோல்வி தான் கண்டார். பின் அந்த கல்யாண மண்டப இடத்தை அரசிடம் விஜயகாந்த் ஒப்படைத்து விட்டார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய மண்டபத்தை இடிக்க வேண்டாம் என்று முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து விஜயகாந்த் கோரிக்கையும் வைத்திருந்தார். ஆனால், அதை முதலமைச்சர் ஏற்றுக்கொள்ளவில்லை.

-விளம்பரம்-

திமுக மீது கோபம் கொள்ள காரணம்:

தொடர்ந்து அந்த மண்டபம் இடிக்கவும் பட்டது. இதனால் விஜயகாந்த் ரொம்பவே நொடிந்து போனார். இந்த சம்பவத்திற்கு பிறகு தான் விஜயகாந்த், திமுக மீதும், கருணாநிதி மீதும் கடுமையான கோபம் கொண்டார். தன்னுடைய மண்டபத்தை வேணுமென்று இடிப்பதற்காகவும், என்னுடைய அரசியல் பயணத்தை முடக்கவும் இந்த செயல்கள் எல்லாம் செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார். இவர் கடைசிவரை திமுகவோடு கூட்டணியும் வைக்கவில்லை.

விஜயகாந்த் உடல் நல்லடக்கம்:

மொத்தம் இருந்த ஒரு ஏக்கர் இடத்தில் 56 சென்ட்வரை மட்டுமே இடிக்கப்பட்ட நிலையில் மீதமிருந்த மூன்று கிரவுண்டு நிலம் விஜயகாந்த்க்கு கொடுக்கப்பட்டது. அந்த மீதம் இடத்தை தற்போது இருக்கும் திமுக தலைமை அலுவலகமாக கட்டப்பட்டது. தற்போது விஜயகாந்த் உடலை அந்த இடத்தில் தான் வைக்கப்பட்டு அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். மேலும், உயிருக்கும் மேலாக பார்த்த அந்த இடத்திலேயே விஜய்காந்திற்கு இன்று அரசு மரியதுடன் நல்லடக்கம் செய்ய இருக்கின்றனர்.

Advertisement