எப்படி தான் இப்படி கதைய தேர்ந்தெடுக்கிறாரோ ஹரிஷ் கல்யாண் – ‘பார்க்கிங்’ பட விமர்சனம் இதோ.

0
367
parking
- Advertisement -

இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பார்க்கிங். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா ரவிச்சந்திரன், எம் எஸ் பாஸ்கர், இளவரசு உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் டிசம்பர் 1ஆம் தேதி தான் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஸ்ரீநிஸ் தயாரித்திருக்கிறார்கள். இன்று இந்த படத்தினுடைய பத்திரிகையாளர்கள் காண சிறப்பு காட்சி போடப்பட்டிருக்கிறது. இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

- Advertisement -

படத்தில் ஹரிஷ் கல்யாண் சென்னையில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இவர் இந்துஜா என்பவரை காதலிக்கிறார். பின் இருவருமே திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு இந்துஜா கர்ப்பமாக இருக்கிறார். அதற்குப்பின் இந்துஜா- ஹரிஷ் இருவருமே ஒரு புது வீட்டிற்கு குடி பெயர்கிறார்கள். அந்த வீட்டினுடைய அடித்தளத்தில் அரசு ஊழியராக எம் எஸ் பாஸ்கர் தன்னுடைய மனைவி, மகள்களுடன் பத்து வருடத்திற்கு மேலாக வசித்து வருகிறார்.

மேலும், ஹரிஷ் கல்யாண் தன்னுடைய மனைவி இந்துஜாவுடன் சந்தோசமாக இருக்கிறார். தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருப்பதால் வெளியில் அழைத்துச் செல்ல புது கார் ஒன்றை வாங்குகிறார். அதனை தன்னுடைய வீட்டில் நிறுத்தும்போது ஹரிஷ் கல்யாணுக்கும் எம்எஸ் பாஸ்கருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு சிறிய பார்க்கிங் பிரச்சினையால் பெரிய அளவில் விளைவுகளை ஏற்படுத்துகிறது. இறுதியில் என்ன நடந்தது? என்பதை இயக்குனர் சுவாரசியமாக சொல்லி இருக்கிறார்.

-விளம்பரம்-

அறிமுகம் இயக்குனராக இருந்தாலும் முதல் படத்திலேயே சிறப்பாக கதை களத்தை இயக்குனர் கொடுத்து இருக்கிறார். நடிகர்கள் தேர்வு, கதைக்களம், வசனங்கள் என அனைத்திலும் நன்றாக செய்திருக்கிறார். சாக்லேட் பாயாக வந்த ஹரிஸ் கல்யாண் இந்த படத்தில் புதுவித ரோலில் நடித்திருக்கிறார். இவரை அடுத்து கதாநாயகியாக வரும் இந்துஜா தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சியில் இவருடைய நடிப்பு வேற லெவல்.

இவர்களைத் தொடர்ந்து அரசு ஊழியராக வரும் எம் எஸ் பாஸ்கர் தன்னுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த படத்தின் மூலம் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நிறைய பாராட்டுகள் கிடைக்கும். இந்த படத்திற்கு ஒரு பெரிய பலமாகவே எம்.எஸ். பாஸ்கரின் நடிப்பு இருக்கிறது என்றே சொல்லலாம். மேலும், ஒரு சின்ன ஈகோவில் என்னென்ன எல்லாம் பிரச்சனை ஏற்படுகிறது என்பதை இயக்குனர் காண்பித்து இருக்கிறார்.

தேவையில்லாத காட்சிகள் , சண்டை, பாடல், வசனங்கள் எல்லாம் இல்லாமல் கதைக்கு தேவையானதை இயக்குனர் கொடுத்து இருக்கிறார். குறிப்பாக, சென்னை போன்ற பெரிய நகரங்களில் ஏற்படும் பார்க்கிங் பிரச்சனையை மையமாக வைத்து இயக்குனர் இந்த படத்தை கொடுத்திருக்கிறார். கண்டிப்பாக இந்த படம் ரசிகர்களுக்கு பிடிக்கும். அதுமட்டுமில்லாமல் பார்க்கிங்கால் இப்படி எல்லாம் மக்களுக்கு பிரச்சினை ஏற்படுமா என்பதையும் இயக்குனர் சிந்திக்க வைத்திருக்கிறார். மொத்தத்தில் குடும்பத்துடன் சென்று பார்க்கும் படமாக பார்க்கிங் இருக்கிறது.

நிறை:

நடிகர்களின் நடிப்பு சிறப்பு

கதைக்களம் அருமை

கிளைமாக்ஸ் ஓகே

சமூகத்திற்கு தேவையான மெசேஜ்

குறை:

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள் தான்

முதல் பாதி பொறுமையாக செல்கிறது

பாடல்கள் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை

சண்டைக் காட்சிகள் கொஞ்சம் இருந்திருக்கலாம்

மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு குறைபாடுகள் எதுவும் இல்லை

மொத்தத்தில் பார்க்கிங்- ரசிகர்களுக்கு பிடிக்கும்

Advertisement