சீருடையில் கூட தாமரை சின்னம் – கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்.பி.

0
845
- Advertisement -

நாடாளுமன்றத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் புதிய சீருடைகள் தாமரை மலர் படம் அச்சடிக்க பட்டுள்ளது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்ற பணியாளர்களுக்கு புதிய சீருடைகள் தாமரை சின்னம் இருப்பதாலும் காவி நிறத்தால் இருப்பதாலும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்  சாட்டி வருகின்றனர். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் ஆனது 18 தேதி அன்று தொடங்கி இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த கூட்டத்தொடர்  22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது நேரு மாடல் கோர்ட் காக்கிநிற சட்டை, புடவை ஆகியவை அங்கு பணிபுரியும் வழங்கப்பட்டுள்ளன. இதில் செப்டம்பர் 18ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பழைய பாராளுமன்ற கட்டிடத்திலும் 19ஆம் தேதி முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திலும் கூட்டத்தொடர்கள் நடைபெறும். இதன் முன்னரே பழைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைய மாற்றங்கள் செய்த நிலையிலும் புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர்களிலும் பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர்.

- Advertisement -

அதில் ஒரு பகுதியாகத்தான் நாடாளுமன்ற ஊழியர்களுக்கு புதிய டிரஸ் கோட் மற்றும் சீருடைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி  ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு புதிய சீருடைகளையும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஆண் பணியாளர்களுக்கு சபரி சூட் போன்ற உடை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர்களுக்கு லேசான காவிநிறத்தில் சட்டையும் வழங்கப்படுகிறது. இந்த வகை என்ன சீருடைகளில் தாமரை பூக்கள் இடம்பெற்றுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

எம்.பியின் குற்றச்சாட்டு:

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் எம் பி யும் மக்களவை கொடாருமான மாணிக் தாகூர்  தனது எக்ஸ் தளத்தில் அவரது கண்டனத்தை தெரிவித்தார். நாடாளுமன்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட இருக்கும் புதிய சீருடையில் ஆளும் கட்சியான பாஜகவின் தேர்தல் சின்ன  சின்னம் இடம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தேசிய விலங்கான புலி தேசியப் பறவையான மயில் ஆகியவற்றை விட்டுவிட்டு தேசிய மலரான தாமரை சின்னத்தை மட்டும் பொரிப்பது காரணம் என்ன அது பாஜகவின் தேர்தல் சின்னம் என்பதால்தான் அதனைப் பொருத்து வைக்கின்றதா.?

-விளம்பரம்-

இந்தத் தவறை மக்களவைத் தலைவர் அனுமதிப்பது ஏன் நாடாளுமன்றம் என்பது குறிப்பிட்டச் சார்பை சார்ந்தவர்களுக்கு மட்டுமானது அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சின்னத்திலும் இதே போல் தான் அவர்கள் நடந்து  கொண்டார்கள். நாடாளுமன்றத்தை தங்கள் கட்சியின் சின்னமாக மாற்ற பாஜக அரசு முயன்று வருகிறது. அரசியல் சாசன அமைப்புகள் கல்வி நிலையங்கள் என அனைத்திலும் தங்களை எப்படியாவது நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆளும் பாஜக அரசியல் செய்து வருகிறது என்று மாணிக் தாக்கூர் எம்பி அவரது கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.

Advertisement