எனக்கு சரியெனப் படுவது சிலருக்கு தவறென படுவதால் அதை நீக்கினேன் – மறக்குமா நெஞ்சம் விஷயத்தில் ட்வீட் செய்து வாங்கிக்கட்டிக்கொண்ட பார்த்திபன்.

0
1605
parthiban
- Advertisement -

சோசியல் மீடியா முழுவதும் ஏ ஆர் ரகுமானின் இசை கச்சேரி குறித்த சர்ச்சை தான் பூதாகரம்பாக வெடித்து கொண்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்சயால் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டு மக்கள் அவதிக்கு உள்ளாகினர். மேலும், 5000 முதல் 50000 வரை டிக்கெட் வாங்கி நிகழ்ச்சிக்கு சென்ற பலர் உள்ளே கூட செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலும், சரிவர நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யாததால் பலர் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தனர், கூட்டத்தில் பெண்கள் சிலர் பாலியல் சீண்டலுக்கு ஆளாகினர். ஒரு சிலருக்கு காயம் கூட ஏற்பட்டது.

-விளம்பரம்-

மேலும், நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் பலர் ரஹ்மானை கடுமையாக திட்டி தீர்த்ததோடு இந்த நிகழ்ச்சியை இவ்வளவு மோசமாக ஏற்பாடு செய்த ACTC event நிர்வாகத்தை சமூக வலைத்தளத்தில் கடுமையாக சாடினார். இந்த விவகாரம் சமூக வலைத்தளத்தில் சர்ச்சையானதை தொடர்ந்து ஏ ஆர் ரஹ்மான் இந்த தவறுக்கு தானே பொறுப்பேற்று பலியாடாக மாறிவிடுகிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.

- Advertisement -

இந்த விவகாரத்தில் ரஹ்மானுக்கு பல திரை பிரபலங்கள் சமூக வலைதளத்தில் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் இதுகுறித்து பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் ‘◦மறக்குமா நெஞ்சம்’ மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் வருத்தத்திற்குரியது. நடத்தியவர்களின் பொறுப்பு அது. திரு ARR தூய்மையான இனிய மனிதர்.அவரே மனம் மிக வருந்தி பொறுப்பை தானும் ஏற்றுக் கொள்வதாக முன் வந்திருக்கிறார்.

அவரின் மென்மையான மனமும் மேன்மையான குணமும் எனக்குத் தெரியும்!என்னுடைய புதிய படத்திற்கு அவர் இசையமைக்கவில்லையேத் தவிர, கும்மிடிப்பூண்டியில் உள்ள அவரது ஸ்டூடியோவில் படபிடிப்பு நடந்த போது அவரது மேனேஜர் திரு சுகந்தனை அழைத்து“நான் பெரிதும் மதிக்கும் மிக சிறந்த creator பார்த்திபன்,அவரின் மனம் நோகாமலும் முகம் சுளிக்காமலும் நடந்துக் கொள்ளுங்கள்”எனக் கூறியதாக ராஜ உபச்சாரம் எனக்கு.

-விளம்பரம்-

தான் சம்மந்தப்படாத விஷயத்தில் கூட மற்றவர் மனம் நோகாதிருக்க நினைப்பவர்,தான் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாத்த்திற்காக மனம் உடைந்திருப்பார்.இனி இன்னும் கவனம் கொள்வார். அவருக்கு நான் மட்டுமல்ல இந்தத் திரையுலகமே துணை நிற்கும்.அவரின் இசையை தொடர்ந்துக் கொண்டாடுவோம்’ என்று பதிவிட்டு இருந்தார். பார்த்திபனின் இந்த பதிவை கண்ட பலரும் இந்த பதிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்வதை விட ரஹ்மானின் புகழ்ச்சி தான் அதிகம் இருக்கிறது என்று விமர்சித்தனர்.

இதனால் மீண்டும் பதிவு ஒன்றை போட்டுள்ள பார்த்திபன் ‘நான் பதிவிடுவென யாவும், நான் அறிந்ததும் நான் உணர்வதும். அக்கருத்து அனைவரையும் திருப்திபடுத்தி விட முடியாது.நான் பதிவிட்டதில் முதல் வரி பொதுமக்களின் இன்னல்கள் வருத்தத்திற்குரியது என்பதே. திரு ARR பணத்தைத் திருப்பிக் கொடுக்க முன்வந்த tweet-ஐ பார்த்த பின்பே இது சுமூகமாக நடைபெற வேண்டும் என்றே என் கருத்தை பதிவிட்டேன் அதிலிருந்த ஒரு வரியை பின்னர் நீக்கிவிட்டேன்.

காரணம் செய்தி தேவையில்லாமல் திசை திரும்புவதால். நான் மதிக்கும் ஒருவர் என்னை எவ்வளவு மதிக்கிறார் என்பதை கேள்விபடும் போது மகிழ்வாகத்தானே இருக்கும்.(So நான் பதிவிடுவது எனக்கு சரியெனப் படுவது) அது தவறென சிலருக்கு படுவதால் அதை நீக்கினேன். மற்றபடி என் வார்த்தைகளும் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். பொதுமக்கள் பட்ட சிரமத்தை பணத்தால் ஈடுகட்டி விடமுடியாது ஆனால் பணநஷ்டத்தையாவது ஈடு செய்ய வேண்டும். என்பதே என் விருப்பமும்.திரு ARR நல்ல மனம் படைத்தவர். தவறுக்கு தானே பொறுப்பு எடுத்துக் கொள்வதாக சொல்லியிருப்பதாலும் தான் அவருடன் துணை நிற்பதாக பதிவிட்டேன். நல்லது நடக்கட்டும்! நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement