கார்லே ஏறிட்டார் அமராவதி தயாரிப்பாளரை பார்த்ததும் – தந்தையின் இறுதி ஊர்வலத்தில் அஜித் செய்த செயல் குறித்து பார்த்திபன் நெகிழ்ச்சி.

0
606
Ajith
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக திகழ்ந்துவரும் நடிகர் அஜித்குமாரின் தந்தை காலமாகி இருக்கும் சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அஜித் குமார் ஐதராபாத்தை சேர்ந்தவர். ஆனால், இவருடைய தந்தை தமிழ், தாய் சிந்தி. கராச்சி பார்ட்டிஷன் போது அஜித்தின் அம்மா அங்கிருந்து வந்துவிட்டார்கள். இவர்களுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள் ஆவார். அதில் இரண்டாவது மகனாகப் பிறந்தார் தான் அஜித்.

-விளம்பரம்-

அஜித் தந்தை வேலை ட்ரான்ஸ்பர் போது ஹைதராபாத்திற்கே வந்துவிட்டனர். அதற்கு பின்னர் இவர்கள் சென்னைக்கு வந்து 50 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட்து. இப்படி ஒரு நிலையில் அஜித்தின் தந்தை மணி என்கிற சுப்ரமணி நேற்று அதிகாலை காலமாகி இருக்கும் சம்பவம் அஜித் குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்திஇருந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு இவருக்கு உடல்நிலை மோசமாக இருந்ததாக செய்திகள் வெளியாக இருந்தது.

- Advertisement -

மேலும், அவருக்கு கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அஜித்தின்  தந்தை சுப்பிரமணியம் – தாய் மோகினி சென்னையில் தனியாக வசித்து வந்தனர். கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோய்க்கு சிகிச்சை எடுத்து வந்த சுப்பிரமணியம் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 84.

இந்த சம்பவம் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை பெசன்ட் நகரில் உள்ள அஜித்தின் வீட்டில் இறுதி சடங்குகள் நடைபெற்ற நிலையில் பல்வேறு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் நேரில் சென்று தங்கள் இரங்கலை தெரிவித்து இருந்தனர். அந்த வகையில் நடிகர் பார்த்திபனும் நேரில் சென்று தனது இரங்கலை தெரிவித்து இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் அஜித் ரசிகர் ஒருவர் அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார்.

-விளம்பரம்-

அந்த பதிவிற்கு ரிப்ளை செய்துள்ள பார்த்திபன் ‘தந்தையின் மறைவின் போது,நண்பர் அஜீத் உள்ளூரில் இருந்தது நல்லது.சோகத்தை புதைத்துக் கொண்டு வந்தவர்க்கு நன்றி சொன்னார். மயானம் செல்ல தயாரானபோது காரில் அமர்ந்தவர் என்னருகில் சோழா பொன்னுரங்கம் (அமராவதி தயாரிப்பாளர்)நிற்பதை கண்டு இறங்கி வந்து நன்றி சொல்லிச் சென்ற பண்பு அவருக்கானது’ என்று பதிவிட்டுள்ளார்.

அஜித், பார்த்திபன் இருவரும் இணைந்து நீ வருவாய் என படத்தில் நடித்துள்ளார்கள். ராஜகுமாரன் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் நீ வருவாய் என. இந்த படத்தில் பார்த்திபன், தேவயானி நடித்து இருந்தனர். முக்கிய கதாபாத்திரத்தில் அஜீத் நடித்து இருப்பார். தான் நடித்த படத்தில் அஜித் நடித்து இருந்தாலும் இந்த படத்தின் போது அஜித்தை ஒரு போட்டோ ஷூட்டின் போது மட்டுமே பார்த்திபன் சந்தித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement