காவேரி விவகாரம் – சிவராஜ்குமார் செயல் குறித்து பார்த்திபன் பதிவிட்ட பதிவு.

0
1284
Parthiban
- Advertisement -

சித்தார்த்துக்கு ஆதரவாக குரல் கொடுத்த சிவராஜ்குமாரை பாராட்டி நடிகர் பார்த்திபன் பதிவிட்ட டீவ்ட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை, எழுத்தாளர் என பன்முகம்கொண்டவர். தற்போது சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சித்தா. இந்த படத்தை ETAKI ENTERTAINMENT நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த்துடன் நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர், சஹஷ்ரா ஸ்ரீ உட்பட பல நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்தை இயக்குனர் அருண்குமார் எழுதி இயக்கி இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை பற்றி இந்த படம் பேசியிருக்கிறது. மேலும், இந்த படத்தை கன்னடத்தில் சிக்கும் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. இதனால் இந்த படத்தின் பிரமோஷனுக்காக நடிகர் சித்தார்த் அவர்கள் கர்நாடகாவிற்கு சென்று இருக்கிறார்.

- Advertisement -

பிரஸ் மீட்டில் நடந்தது:

அங்கு கன்னட ரக்ஷா வேதிகா அமைப்பினர் பிரஸ்மீட்டிற்குள் நுழைந்து சித்தார்த்தை மிரட்டி இருக்கின்றனர். இருந்தாலும் முதலில் சித்தார்த் கண்டுகொள்ளாமல் அமைதியாக பேசிக் கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த கன்னட அமைப்பினர் மேடைக்கு முன் நின்று கோஷமிட்டு அந்த அமைப்பினர் சித்தார்த்தை தொடர்ந்து வெளியேறுமாறு மிரட்டி இருக்கின்றனர். இதனால் சித்தார்த் அங்கிருந்து வெளியேறி இருந்தார். இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரகாஷ் ராஜ் பதிவு;

இது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சித்தாத்திற்கு ஆதரவாக பிரகாஷ்ராஜ் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், நாட்டில் பல வருடமாக இருக்கும் பிரச்சனையை தீர்க்காமல் அனைத்து அரசியல் கட்சிகளையும் மத்திய அரசு வைத்திருக்கிறது. அப்படியே அவர்கள் தலையிட்டாலும் எம்பிக்களை கேட்காமல் சாதாரண மக்களையும், சித்தார்த் போன்ற கலைஞர்களையும் தொந்தரவு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு கன்னடராக அனைத்து கன்னட மக்களின் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

சிவராஜ் குமார் பதிவு:

இவரை அடுத்து பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் கூறியது, மற்றவர்களின் உணர்வுகளை எந்த ஒரு வகையிலும் நாம் புண்படுத்த கூடாது. கன்னட திரை உலகம் சார்பாக நாங்கள் மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் சித்தார்த். இதை செய்தவர்கள் யார் என்று தெரியவில்லை. ஆனால், அதை கண்டு நாங்கள் அதிக வருத்தம் அடைகிறோம். இனி இது நடக்காது என்று கூறியிருக்கிறார். இந்நிலையில் பிரகாஷ்ராஜ், சிவராஜ் குமார் பதிவிற்கு பார்த்திபன் அவர்கள் பதில் போட்டிருக்கிறார். அதில் அவர், ஜெயிலர்’படத்தில் கிளப்பிய Mass-ஐ விட,நிஜத்தில் இன்று கன்னடத்தில் கண்டனம் தெரிவித்து தெறிக்க விட்டு இருக்கும் நண்பர் திரு சிவராஜ்குமார் அவர்களுக்கும், சினிமாவில் மட்டுமே வில்லனாகவும் நிஜத்தில் முதல் ஹீரோவாகவும் குரல் எழுப்பிய நண்பர் திரு பிரகாஷ்ராஜ் அவர்களுக்கும் பாராட்டு !!!!

பார்த்திபன் பதிவு:

எதற்கு?மனதில் உள்ளதை தில் உள்ள மனிதர்களாக நேர்மையாக சொல்லி இருக்கிறார்கள். நீண்ட(கால)காவேரி பிரச்சனையை அதன் நீள அகலங்களில் அரசுகள் அலசி ஆராய்ந்து இன்னும் நீண்ட காலம் தீரா பிரச்சனையாக்கி அரசியல் செய்வதை விட்டு விட்டு,ஒரு கலைஞனை காயப் படுத்தி ஆவதென்ன? அவர்கள்.. எதிரிகளாக நினைக்கும் நம்மிடமிருந்து எதிர்ப்பு எழுவதை விட,அவர்கள் தெய்வமென மதித்த மறைந்த திரு ராஜ்குமார் அவர்களின் வம்சாவழியும்,அவர்கள் பெரிதும் நேசிக்கும் திரு சி.ரா.கு எதிர்ப்பையும் மன்னிப்பையும் வெளிபடுத்தும் போது,அநாவசியமாக அநாகரிகமாக நடந்துக் கொண்ட மிக சிலர் (அவர்கள் மட்டுமல்ல கர்நாடகா என்பது) திருந்த வாய்ப்புள்ளது. நீரின்றி அமையாது உலகு !-திருக்குறள் என்று கூறி இருக்கிறார்.

Advertisement