மறுமணம் செய்யாதது குறித்து நடிகர் பார்த்திபன் கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பார்த்திபன். இவர் இயக்கி நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இவர் சினிமா துறையில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர். அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுப்பதில் கைதேர்ந்தவர். அந்த வகையில் சமீபத்தில் பார்த்திபன் இயக்கி நடித்து இருந்த படம் ‘டீன்ஸ்’. இந்த படத்திற்கு டி. இமான் இசை அமைத்து இருந்தார். இந்த படத்தை பயாஸ்கோப் மற்றும் அகிரா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்தது.
பார்த்திபன் திரைப்பயணம்:
ஹாரர் த்ரில்லர் பாணியில் குழந்தைகளை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி இருந்தார் இயக்குனர். இந்த படத்தில் யோகி பாபு, ஜான் போஸ்கோ, பிராங்கின்ஸ்டன், அஸ்மிதா, பி.கிருத்திகா ஐயர், கே.எஸ்.தீபன், சில்வென்ஸ்டன், உதய்பிரியன், பிரஷிதா, ரோஷன், மகாதேவன்மோர், ரஞ்சித், பால சுவாமிநாதன், கால்டுவெல் வேல்நம்பிமோர் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மூடநம்பிக்கை, அறிவியல் ஆகியவற்றை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் கொடுத்திருந்தார்.
பார்த்திபன் குடும்பம்:
இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை தான் பெற்று இருந்தது. இதை அடுத்து இவர் தன்னுடைய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையே நடிகர் பார்த்திபன் அவர்கள் நடிகை சீதாவை காதலித்து 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சீதாவும் தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகை என்பது அனைவரும் அறிந்ததே. திருமணத்திற்கு பிறகும் சீதா படங்களில் கவனம் செலுத்தி இருந்தார்.
பார்த்திபன்-சீதா பிரிவு:
பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் குணச்சித்திர வேடங்களில் தற்போதும் நடித்து வருகிறார். மேலும், இவர்களுக்கு கீர்த்தனா, ராக்கி, அபிநயா என்று மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இருவரும் இணைந்து 11 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்தார்கள். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு காரணமாக 2001 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். விவாகரத்திற்கு பிறகு சீதா வேறொரு திருமணம் செய்து கொண்டார். ஆனால், பார்த்திபன் திருமணமே செய்து கொள்ளவில்லை.
பார்த்திபன் பேட்டி:
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் இது தொடர்பான கேள்விக்கு பார்த்திபன், சீதாவிற்கு பிறகு யாரையும் என் மனைவியாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் நான் மீண்டும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறி இருக்கிறார். இதற்கு இணையத்தில் ரசிகர்கள் சீதா மீது இவ்வளவு காதல் இருந்தும் ஏன் பிரிந்தீர்கள்? என்று கேட்டு வருகிறார்கள்.