மீண்டும் லிஸ்டில் வராதா தனது படம் – பிரபல பத்திரிக்கை விருது குறித்து பார்த்திபன் போட்ட பதிவு.

0
341
parthiban
- Advertisement -

இயக்குனர் பார்த்திபனின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன். இவர் இயக்குனர் , தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டு திகழ்கிறார். இவருடைய நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரே ஷாட்டில் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் படம் வெளியாகி சிங்கிள் ஷாட் பிலிம் என்ற கின்னஸ் சாதனையை படைத்து இருந்தது. மேலும், இந்த படத்திற்கு பல்வேறு விருதுகளும் கிடைத்து இருந்தது. அதே போல இதற்கு முன்னர் பார்த்திபன் ‘ஒத்த செருப்பு’ என்ற படத்தை இயக்கி நடித்து இருந்தார். இந்த படத்தில் அவர் மட்டுமே நடித்து இருந்தார்.

- Advertisement -

இந்த திரைப்படத்திற்கும் பல விருதுகள் கிடைத்து இருந்தது. மேலும், ஒத்த செருப்பு, இரவின் நிழல் ஆகிய இரண்டு படங்களும் ஆஸ்கர் வரை செல்லும் என்று எதிர்பார்த்தார் பார்த்திபன். ஆனால், அந்த ஆசை நிறைவேறவில்லை. அதே போல ஒத்த செருப்பு படம் வெளியான போது பார்த்திபனுக்கு விகடன் விருதுகள் வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழாவில் நடிகர் பார்த்திபனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு இருந்தது.

ஆனால், ஒத்த செருப்பு படத்திற்கு விருது கிடைக்கவில்லை என்று பார்த்திபன் அந்த விருதை திருப்பி கொடுப்பதாக அறிவித்து இருந்தார். மேலும் தனது மன வருத்தத்தை ட்விட்டரில் தெரிவிதித்திருந்த பார்த்திபன் ‘2தேசிய விருது+ஆஸ்கர் Eligible list-ல் OS7 ஆனால் விகடனில் இல்லை!சிறந்தப் படமே எடுத்தாலும்,அதை சிறந்ததாய் தேர்ந்தெடுக்காதால் வருங்- காலங்களில் விகடனின் விருதுகளை நான் வாங்கிக் கொள்ளப்போவதில்லை.

-விளம்பரம்-

வாழ்நாள் சாதனையாளர் விருதாக உங்கள் கௌரவத்தை ஏற்றுக்கொள்கிறேன்!அமைதி யாக திரும்பி விட்டேன். ரசிகர்களின் கைத்தட்டலை மீறிய விருதில்லை காசை குடுத்து படத்தை பாராட்டும் ரசிகர்களே கொண்டாடிய பிறகு, விகடன் Special mention என்ற விருதாய் இல்லாமல் Insult செய்வதாய் இருந்தது.இனி வாழ்நாளில் உங்கள் விருதே வேண்டாம் ஒரு கலைஞனின்ஆதங்கம்,விருதின் மீது அவனின் மரியாதை’ என்று பதிவிட்டு இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் இந்த ஆண்டும் விகடன் விருதுகள் பட்டியல் வெளியிடப்பட்டு இருந்தது. அதில் கடந்த ஆண்டு வெளியான சில படம், நடிகர், இயக்குனர் என்று பல்வேறு பிரிவுகளில் விருதுகளை அறிவித்து இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு வெளியான பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படம் எந்த பிரிவிலும் இடம்பெறவில்லை. இப்படி ஒரு நிலையில் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் ”

Advertisement