இந்தியாவில் இருக்கும் கோவிகள் ஆண்ட மன்னன் கட்டிய கோயிலாகத்தான் இருக்கும், ஆனால் இது – ராமர் கோவில் குறித்து இளையராஜா

0
498
- Advertisement -

தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாப்பிக்கே அயோத்தி ராமர் கோயில் குறித்த செய்தி தான். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருக்கும் ராமர் கோவில் அனைவரும் அறிந்ததே. இந்தக் கோவில் நாட்டின் பாரம்பரியம் மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கிறது. ஸ்ரீராம் உள்நாட்டு தீர்த்தத்தின்படி இராமர் கோயில் மூன்று அடுக்குகளை கொண்ட தளம். ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. மொத்தம் 392 தூண்களையும், 44 கதவுகளையும் கோயில் கொண்டுள்ளது.

-விளம்பரம்-

மேலும், அயோத்தியில் ராமர் கோயிலுக்கு செல்லும் நுழைவாயிலில் யானைகள், சிங்கங்கள், அனுமான் மற்றும் கருடா போன்ற சிலைகள் இருக்கிறது. பாரம்பரிய முறையில் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இப்படி புகழ்பெற்ற அயோத்தி ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றுஇருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்களின் கனவு நினைவாகி இருக்கிறது. இந்தியா நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான முழுவதும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு முழுவதும் காண வருகை தந்தனர்.

- Advertisement -

அயோத்தி ராமர் கோவில்:

மேலும், பொதுமக்கள் மட்டுமல்லாது ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும் இந்த விழாவில் கலந்து கொண்டுஇருந்தனர். இந்த நிகழ்வு பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் மோடியின் தலைவர்கள், இந்திய சினிமாவின் பிரபல பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். அந்த வகையில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மாதுரி தீக்ஸிட், ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட், விக்கி கவுசல் மற்றும் கத்ரீனா கைஃப், கங்கனா ரனாவத், சச்சின் என பலர் கலந்து கொண்டு இருந்தனர்.

சென்னையில் அயோத்தி நிகழ்ச்சி:

இந்தியா முழுவதும் இந்த நாளை அனைவருமே சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்கள். அந்த வகையில் தேனாம்பேட்டையில் உள்ள நாரத கானா சபா அரங்கில் ‘சென்னையில் அயோத்தி’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றுஇருந்தது . இதில் ஆளுநர் ஆர் என் ரவி, இசையமைப்பாளர் இளையராஜா உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் பேசிய இளையராஜா, இன்றைய நாள் சரித்திரத்திலேயே முக்கியமான நாள்.

-விளம்பரம்-

இளையராஜா பேசியது:

இராமர் கோயில் நிகழ்வு பிரதமர் மோடிக்கு அழியாத புகழை தேடி தரும். யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்! யாரால் செய்ய முடியும்? எல்லோராலும் செய்து விட முடியுமா? யாராலுமே செய்ய முடியாது. இது பிரதமர் மோடிக்கு என்று கடவுள் எழுதி வைத்திருக்கிறார். இந்தியாவில் எத்தனையோ பிரதமர்கள் வந்து போனார்கள். என்னென்ன செய்தார்கள் என்று பாருங்கள். அதில் யார் செய்தது அதிகம் என்று எண்ணி பாருங்கள். மோடி செய்த காரியத்தை சொல்லும்போதே கண்களில் நீர் வருகிறது.

மோடி குறித்து சொன்னது:

அயோத்தியில் இருக்க வேண்டிய நான் இங்கு இருப்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எனக்கு ஆறுதலை அளித்திருக்கிறது. இந்தியாவில் எத்தனையோ கோயில்கள் இருக்கின்றன. அந்தந்த பகுதிகளில் ஆண்ட மன்னன் கட்டிய கோயில் ஆகத்தான் அது இருக்கும். மொத்த இந்தியாவுக்கும் ஆன கோயிலாக ஒன்று உருவாக்கியது என்றால் அது அயோத்தி ராமர் கோயில் தான். மன்னர்கள் கோயில்களை கட்டிய நிலையில் ராமர் பிறந்த இடத்திலேயே அவருக்காக கோயில் கட்டி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மன்னர்கள் செய்த வேலையை பிரதமர் செய்திருக்கிறார் என்று புகழ்ந்து பேசி இருக்கிறார்.

Advertisement