6 ஆண்டுகளுக்கு முன் போலீசால் நிகழ்ந்த அவமானம் – கார்த்தி ரசிகர்களுக்கு கிடைத்த நியாயமான தீர்ப்பு

0
337
karthi
- Advertisement -

லஞ்சம் தர மறுத்த நடிகர் கார்த்தி ரசிகர்களை போலீஸ் தாக்கியற்கு தகுந்த தண்டனை கிடைத்துள்ள சம்பவம் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. பழம்பெரும் நடிகர் சிவக்குமாரின் மகன் கார்த்தி மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2007-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பருத்தி வீரன்’ படம் மூலம் தான் கார்த்தி ஹீரோவாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று இருக்கிறது. தற்போது இவர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். விருமன் படம் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும், இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, அதிதி சங்கர் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

- Advertisement -

கார்த்தி நடிக்கும் படங்கள்:

இதனை தொடர்ந்து கார்த்தி பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி இருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமாக இந்தத் திரைப்படம் தயாராகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து கார்த்திக் தற்போது சர்தார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிஎஸ் மித்ரன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கார்த்தி இரு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் திரில்லர், அதிரடி படமாக உருவாகி வருகிறது.

தோழா படத்தின் போது நடந்தது:

இந்த படத்தில் ராஷ்மிகா மற்றும் ராஜீஷா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த நிலையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக் ரசிகர் மன்றத்தை தாக்கிய போலீஸுக்கு தகுந்த தண்டனை கிடைத்துள்ள சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, கார்த்திக் நடிப்பில் வெளிவந்த படம் தோழா. இந்த படம் தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிவந்த போது கார்த்திக் ரசிகர் மன்ற தலைவரான வெங்கடேஷ் மற்றும் நிர்வாகிகள் வெங்கடகொடி, சீனிவாஸ் ஆகியோர் போஸ்டர் ஒட்ட போலீசிடம் அனுமதி கேட்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

கார்த்தி ரசிகர்களுக்கு நடந்த சம்பவம்:

அப்போது தூத்துக்குடி மத்திய காவல் நிலைய தலைமைக் காவலர்கள் லஞ்சம் கேட்டு இருக்கிறார்கள். அதற்கு கார்த்திக் ரசிகர்கள் தர மறுக்கின்றனர். இதனால் அங்கு இருந்த காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார், உதவி ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் தலைமைக் காவலர் திரவிய ரத்தினராஜ் ஆகியோர் ஆபாசமாக ரசிகர்களை திட்டியதோடு மட்டும் இல்லாமல் கடுமையாக தாக்கி இருந்தனர். இந்த சம்பவம் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்தது. இது தொடர்பாக கார்த்திக் ரசிகர்கள் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்து மனு தாக்கல் செய்திருந்தார்கள்.

மனித உரிமை ஆணையம் அளித்த தீர்ப்பு:

இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர், சமர்ப்பித்த சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களிலிருந்து 3 போலீசாரும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டதாக கூறி பாதிக்கப்பட்ட வெங்கடகொடிக்கு 5 லட்சம் ரூபாயும், சீனிவாஸ் மற்றும் வெங்கடேஷுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த தொகையை மூன்று போலீசாரிடமும் தலா 2 லட்சம் ரூபாய் வீதம் பிடித்தம் செய்ய உத்தரவிட்டது. அதுமட்டுமில்லாமல் போலீசாருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கையும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது.

Advertisement