சக நடிகையை கிண்டல் செய்த நடிகர்..!பின்பு 68 கோடி ரூபாய் இழப்பை வாங்கிய நடிகை..!

0
224

கடந்த சில மாதங்களாக திரைத்துறையில் மீடு விவகாரம் பெரும் சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது. இங்கே இப்படி இருக்க ஹாலிவூடில் தன்னை ஆபாசமாக கிண்டல் செய்த சக நடிகரை கோர்ட்டிற்கு இழுத்து கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு வாங்கியுள்ளார் ஒரு நடிகை.

பாலியல் சீண்டல் புகார் தெரிவித்த அமெரிக்க நடிகை எலிசா டுக்சு-க்கு 68 கோடி ரூபாயை இழப்பீடாக சிபிஎஸ் தொலைக்காட்சி வழங்கியுள்ளது. அமெரிக்காவில் பிரபலமான சிபிஎஸ் தொலைக்காட்சியில் புல் என்ற தொடரில் நடித்து வந்துள்ளார் நடிகை  எலிசா டுக்சு

இவர் ,தன்னுடன் இணைந்து பணியாற்றிய பிரபல நடிகர் மைக்கேல் வெதர்லி மீது பாலியல் சீண்டல் புகார் தெரிவித்தார்.படப்பிடிப்பின்போது, மைக்கேல் வெதர்லி, தமது உடலமைப்பை மோசமாக வர்ணித்தும், ஆபாச ஜோக்குகள் கூறியதாகவும் புகார் கூறிய நடிகை எலிசா, இது குறித்து வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்தார். 

இதனிடையே, நடிகையை நகைச்சுவையாக கமெண்ட் அடித்ததை, நடிகர் வெதர்லி ஒப்புக்கொண்டார். இதையடுத்து, நடிகை கேட்டபடி, இந்திய மதிப்பில் 68 கோடி ரூபாயை சிபிஎஸ் தொலைக்காட்சி இழப்பீடாக வழங்கியுள்ளது.