ரோபோ சங்கர் மகள் திருமணம் – முதல்வர் முதல் கமல் வரை நேரில் சென்று அழைக்கும் குடும்பத்தனர்.

0
1069
Robo
- Advertisement -

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா திருமணம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு நடிகர், நடிகைகள் சென்று இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர். குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர். முதலில் பாடி பில்டராக இருந்த இவர் மேடை காமெடியனாக அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தொலைக்காட்சியில் டிவி மூலம் கிடைத்த பிரபலத்தின் வாயிலாக தான் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ரோபோ ஷங்கர். அதன் பின்னர் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து இருக்கிறார். இதனிடையே 2002 ஆம் ஆண்டு நடிகர் ரோபோ ஷங்கர் அவர்கள் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

ரோபோ ஷங்கர் திரைப்பயணம்:

இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் ஒரு மகள் சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட வீராங்கனையாக ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார் என்று சொல்லலாம். அதனை தொடர்ந்து இவர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் படத்தில் நடித்திருந்தார்.

ரோபோ ஷங்கர் மகள்:

தற்போது இவர் சில படங்களில் கமிட்டாகி நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் இவர் தன்னுடைய முறை மாமனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள், அவர் உங்களது முறை மாமனா? அவரை தான் நீங்கள் திருமணம் செய்ய போகிறீர்களா? என்று கேட்டிருக்கிறார்கள் . அதற்கு இந்திரஜா, ஆமாம், திருமணம் குறித்து விரைவில் தகவல் வரும் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்திரஜா தன்னுடைய மாமா கார்த்திக்குடன் சேர்ந்து நிறைய ரீல்ஸ் வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

கார்த்திக் குறித்த தகவல்:

கார்த்திக் மதுரையை சேர்ந்தவர். இவர் தொடர்வோம் என்ற பெயரில் தன்னார்வல அறக்கட்டளையை நிறுவி இருக்கிறார். இதில் பல குழந்தைகளை வளர்த்தும் வருகிறார். மதுரையில் அவருடைய இல்லத்தில் ஏராளமான குழந்தைகளை தங்கி படித்து வருகின்றனர். அதோடு சினிமாவில் இயக்குனர் ஆக வேண்டும் என்பதுதான் கார்த்திக் உடைய நீண்ட நாள் ஆசை. அதற்காக தான் அவர் தற்போது கடினமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

திருமணம் குறித்து அப்டேட் :

இந்த நிலையில் இவர்களுடைய திருமணத்திற்கு அழைப்பதற்காக ரோபோ சங்கர் தன்னுடைய குடும்பத்துடன் கமலஹாசனை நேரில் சந்தித்து இருக்கிறார்கள். பின் முதலமைச்சரை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்த போது எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்து சிலர் ரோபோ சங்கர் தனது குடும்பத்துடன் திமுகவில் இணைந்து விட்டதாக வதந்திகளை கிளப்பினார்கள். ஆனால், அது அவர்களுடைய மகளின் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற போது எடுத்த புகைப்படம் என்று தெளிவாகி இருக்கிறது. மேலும், ரோபோ சங்கர் மகளின் திருமணம் குறித்து அப்டேட் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Advertisement