பெரியார் சிலை விவகாரம், தலைமறைவாக இருந்த கனல் கண்ணன். செல் போன் டவரை வைத்து தூக்கிய போலீஸ். (அதுவும் எங்க பதுங்கி இருந்திருக்கார் பாருங்க.)

0
450
kanal
- Advertisement -

ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என கனல் கண்ணன் பேசியிருக்கும் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாக போலீசார் தெரிவித்து இருக்கின்றனர். தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான ஸ்டண்ட் மாஸ்டராக திகழ்ந்தவர் கனல் கண்ணன். இவர் ஸ்டண்ட் மாஸ்டராக நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அவ்வபோது காமெடி காட்சிகளிலும் வந்து கனல் கண்ணன் அசத்தியிருக்கிறார். 1991 ஆம் ஆண்டு சரத்குமார் நடித்த சேரன் பாண்டியன் படத்தின் மூலம் தான் சண்டை பயிற்சி இயக்குனராக கனல் கண்ணன் அறிமுகமாகி இருந்தார். அதற்கு பின்பு இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ் என 4 தலைமுறை நடிகர்களுடன் இவர் சண்டை பயிற்சியாளராக நடித்திருக்கிறார். கடைசியாக இவர் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த குருதி பூக்கள் என்ற படத்தில் தான் பணியாற்றியிருந்தார்.

-விளம்பரம்-

அதற்கு பின் இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லை. இதனால் ஊடக பக்கமே கனல் கண்ணன் இல்லாமல் இருந்தார். தற்போது கனல் கண்ணனின் பேச்சு சோசியல் மீடியாவில் பயங்கர கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இந்த கூட்டணி முன்னணி பொதுக்கூட்டம் ஒன்றில் கனல்கண்ணன் பேசி இருந்தார். அந்த விழாவில் கனல் கண்ணன் அவர்கள் கூறியிருந்தது, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் முன்பு கடவுள் இல்லை என்று சொன்னவர் சிலை இருக்கிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : ‘ஜோசப் விஜய்’ – பல ஆண்டுகாலமாக இருந்து வரும் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் வீட்டின் முன் இருக்கும் விஷயம்

பெரியார் குறித்து கனல் கண்ணன் சொன்னது:

அந்த சிலையை உடைக்க வேண்டும். அந்த நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று பேசி இருக்கிறார். அவர் சொன்னபடி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் முன்பு பெரியார் சிலை தான் இருக்கிறது. பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என கனல் கண்ணன் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலரும் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது அவருடைய பேச்சு சமூக வலைத்தளங்களில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது.

-விளம்பரம்-

விமர்சனம் தெரிவிக்கும் நெட்டிசன்கள்:

அது மட்டுமில்லாமல் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் எனவும் பலரும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். அதில் சங்கி அடிமை, இவனைப் போன்றவர்களை உயர்த்த உரிமைப் போராட்டம் தடத்தியவர்தான் தந்தை பெரியார் என்பதை மறந்துவிட்டு உளருகிறான். மாட்டு கோமியத்தை குடிக்கிறவனுக்கு என்னடா தெரியும் பெரியாரின் பகுத்தறிவை பற்றி. இந்து மதம் அது மதம் அல்ல. மனிதனை இழிவு படுத்தி ஏற்றத்தாழ்வுக்கு உள்ளாக்கி மனிதனை அடக்கி ஆளும் மதவெறி என்றும் கூறி வருகிறார்கள்.

இந்து முன்னணி அமைப்பில் கனல் கண்ணன்:

மேலும், கனல் கண்ணன் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்து முன்னணி அமைப்பின் இணைந்திருக்கிறார். சினிமாவில் பிசியாக இருந்ததால் இவரால் இந்து முன்னணி பிரசாரத்தில் அவ்வளவாக கலந்து கொள்ள முடியாமல் போனத்து. 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு இவர் இந்து முன்னணி நிகழ்ச்சிகளில் தீவிரம் காட்டி வருகிறார். பல்வேறு கூட்டங்களில் பேசியிருக்கிறார். தற்போது இவர் பெரியார் குறித்து பேசி இருப்பது சோஷியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.இந்நிலையில் இந்த கருத்து குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட கனல் கண்ணன் :

இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் கனல் கண்ணனை கைது செய்வதற்காக அவருக்கு சொந்தமான வீடுகளில் காவல் துறையினர் தேடி வருகின்றனர். தற்போது அவர் தலைமறைவாகிவிட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.இந்த நிலையில் கனல் கண்ணன் முன்ஜாமின் பெறுவதற்காக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இப்படி ஒரு நிலையில் அவரது செல்போனை ஆய்வு செய்த சைபர் கிரைம் போலீசார் பாண்டிச்சேரியில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸில் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது. அங்கு சென்ற மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கனல் கண்ணனை கைது செய்தனர்.

Advertisement