அவன் செஞ்ச பாவம், 5 மாசமா போராடுறேன் – படுத்த படுக்கையாக பாலாவை கிழித்தெடுத்த பிதாமகன் தயாரிப்பாளர்.

0
621
Bala
- Advertisement -

சமீப காலமாக இயக்குனர் பாலா பற்றி பல அதிர்ச்சியூட்டும் செய்திகளை சினிமாத்துறையை சேர்ந்த பலரும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிதாமகன், சேது, பாபா போன்ற வெற்றி படங்களை கொடுத்த தயாரிப்பாளர் வி.ஏ.துரை. ஒரு காலத்தில் பிரபல தயாரிப்பாளர்க்காக இருந்த இவர் தற்போது நீரிழிவு நோய்க்கு உள்ளகி பார்த்துக்கொள்ள யாரும் இல்லாமல், பணமும் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார். இவர் ரஜினி, சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களுடன் மிகவும் நெருக்கமான ஒருவராக இருந்தார். ஆனால் தற்போது நீரிழிவு நோயால் நடிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.

-விளம்பரம்-

வி.ஏ.துரை பேட்டி :

இந்த நிலையில் தான் தயாரிப்பாளர் வி.ஏ துரை சமீபத்தில் பிரபல ஊடகம் பேட்டி எடுத்திருந்தது. அந்த பேட்டியில் அவர் கூறியதாவது “படத்திற்கு மேலே “நஷ்டம் வர நஷ்டம் வர” அடுத்த படத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று கோர்த்து விட்டு என்னை இந்த நிலைமைக்கு உள்ளாக்கி விட்டனர். பிதாமகன் படம் தேசிய விருது வரையில் சென்றது, ஆனால் எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. இயக்குனர்களும் நடிகர்களும் அவர்களுக்கு பெருமை சேர்த்து கொண்டனர்.

- Advertisement -

பாலா ஏமாற்றி விட்டார் :

நான் இந்த நிலைமையில் இருக்கும் போது எனக்கு எந்த உதவியும் அவர்கள் செய்யவில்லை. நாளை நான் இறந்தால் கூட யாரும் வரமாட்டார்கள். அது எனக்கு நன்றாக தெரியும். 5 மாதங்களாக போராடிக்கொண்டிருக்கிறேன். இயக்குனர் பாலாவிற்கு பல படவாய்ப்புகள் கொடுத்த பிறகு அவர் பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றி விட்டார். 25 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. போராடியும் பார்த்தேன், அவரது அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தேன். ஆனாலும் பணத்தை வாங்கிக்கொண்டு வாங்கவில்லை என்று சொல்லிவிட்டார்.

சூர்யா செய்த உதவி :

அலுவலகத்தை விட்டே என்னை வெளியில் போக சொல்லிவிட்டார். ஆனால் பணம் வாங்கியதர்க்கு என்னிடம் ஆதாரம் TMB வங்கியில் இருக்கிறது. நான் தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குனர் பாலா என்னை ஏமாற்றி விட்டார் என்று புகார் கொடுத்திருக்கிறேன். பல நடிகர்கள் என்னுடைய படத்தில் நடித்தாலும் சூர்யாவை தவிர யாரும் உதவி செய்யவில்லை என்று கூறினார்.

-விளம்பரம்-

பாலா தொடக்க்கத்தில் :

என்னிடம் இப்போது இருக்கும் வீடு முதற்கொண்டு என்னிடம் எதுவுமே கிடையாது. பல நடிகைகளை அவர்களுடைய மார்கெட்டை பார்த்து தான் வாய்ப்பு கொடுத்தோம். “பிதாமகன்” படத்தை ரூபாய் 4.5 கோடிகளில் முடித்து தருகிறேன் என்று கூறினார். ஆனால் 12, 13 கோடிகளுக்கு மேல் ஆகிவிட்டது. பாலாவின் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருந்தது. சிறந்த மனிதராக எனக்கு தெரிந்தார். அனால் பட்ஜெட் அதிகமாகிறது என்று சொல்லும் போது என்னை நீக்கிவிட்டார்.

இந்த நிலைமைக்கு காரணம் :

நான் படம் அதிகமான பட்ஜெட் போகும் போதே நான் பாலாவிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால் அவர்கள் பயப்பட வேண்டாம் இது வேறலெவல் படம் என்றனர். பிதாமகன் வேற லெவல் படம் தான். ஆனால் எனக்கு என்ன பிரோயோஜனம், படத்தை சேர்ந்த அனைவருக்கும் பேரும்,புகழும் போய் சேர்ந்ததே தவிர எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. என்னுடைய இந்த நிலைமைக்கு காரணம் முழுக்க முழுக்க இயக்குனர் பாலா தான். பணத்தை வாங்கிவிட்டு என்னுடைய முகத்தை பார்த்து இல்லை என்று சொல்லிவிட்டார்.

ரஜினி நல்லவர் :

ரஜினிகாந்த் படங்களில் அதிகம் பணியாற்றி இருப்பதினால் அவரை பற்றி கேட்டபோது. மற்ற நடிகர்களை விட ரஜினிகாந்த் மிகவும் நல்ல மனிதர். பழகி பல வருடங்கள் ஆகியதால் அவருக்கு நான் இருக்கும் நிலைமை என்னவென்று தெரியவில்லை. அதனால் தான் உதவி செய்யவில்லை. மற்றபடி நல்ல மனிதர் என்று கூறினார். இந்நிலையில் இவருக்கு ரஜினிகாந்த் ரசிகர் மற்றம் சார்பில் இருந்து உதவி செய்யப்போவதாக கூறியிருக்கின்றனர்.

எச்சரிக்கும் வி.ஏ.துரை :

மேலும் தற்போது சினிமா துறைக்கு வரும் புதிய தயாரிப்பாளர்கள் அதிக எச்சரிக்கையுடன், புத்திசாலியாக இருக்க வேண்டும் இல்லை என்றால் கவுத்து விட்டு விடும் என்று எச்சரித்தார். மேலும் தற்போது என்னுடன் யாருமே இல்லை பணம் இருக்கும் போது அனைவரும் இருந்தார்கள். ஆனால் இப்போது யாரும் இல்லை என்று கூறினார் அழுதபடி கூறினார் தயாரிப்பாளர் வி.ஏ.துறை.

Advertisement