இனி இவருக்கு பதில் இவர் – ஒரே மாதத்தில் பாரதி கண்ணம்மா 2வில் மாற்றப்பட்ட நடிகை.

0
898
Barathikanamma
- Advertisement -

பாரதி கண்ணம்மா 2 சீரியல் தொடங்கிய ஒரே மாதத்திற்குள் நடிகையை மாற்றம் செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடரின் முதல் பாகத்தில் பாரதியாக அருண் பிரசாத், கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து இருந்தார்கள். பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியல் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. பின் இந்த சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட் எதிர்பாராததை எதிர்ப்பாருங்கள் என்பதற்கு ஏற்ப இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். பாரதி கண்ணம்மா தொடர் முதல் பாகம் முடிந்த கையோடு இரண்டாம் பாகம் துவங்கி இருக்கிறது.

- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியல்:

இந்த இரண்டாம் பாகத்தில் பாரதி, கண்ணம்மா, சௌந்தர்யா, வெண்பா, அஞ்சலி போன்ற முந்தைய சீசன் கதாபாத்திரங்களின் பெயர்களையே இரண்டாவது சீசனிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் கண்ணமாவாக முதல் சீசனில் நடித்த நடிகை வினுஷா தேவி நடிக்கிறார். பாரதியாக ரோஜா சீரியல் நாயகன் சிபு சூர்யன் நடிக்கிறார். சீரியலில் பாரதி பெரிய வீட்டு பிள்ளை. ஆனால், இவருடைய தந்தை சிறுவயதிலேயே இறந்து விட்டார்.

பாரதி கண்ணம்மா 2 சீரியல்:

இதனால் பாரதி படிக்காமல் குடி கும்மாளம் அடிதடி என்று தன் நண்பர்களுடன் சுற்றி கொண்டு இருக்கிறார். இதை நினைத்து தாய் சௌந்தர்யா கவலைப்படுகிறார். இப்படி இருக்க மறுபுறம் கதாநாயகி மத்திய சிறைச்சாலையில் இருந்து வெளியில் வருகிறார். இவரின் பெயர் கண்ணம்மா கிடையாது சித்ரா. இவர் எங்கு செல்வது என்று அலைந்து கொண்டு இருக்கும் போது தான் கண்ணம்மாவின் அறிமுகம் கிடைக்கிறது. ஆனால், எதிர்பாராத விதமாக விபத்தில் கண்ணம்மா இறந்து விடுகிறார்.

-விளம்பரம்-

சீரியலின் கதை:

கண்ணம்மா குடும்பத்தை காப்பாத்த சித்ரா கண்ணம்மாவாக மாறுகிறார். பின் பாரதி -கண்ணம்மா அறிமுகம் ஏற்படுகிறது. ஆனால், தொடக்கத்திலே இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. இப்படி போன சீசனாக்கும் இந்த சீசனுக்கு சம்மந்தம் இல்லாமல் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் பாரதி கண்ணம்மா 2 சீசனில் நடிகை ஒருவர் மாற்றம் செய்திருக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது.

சீரியலில் நடிகை மாற்றம்:

அதாவது, இந்த சீரியலில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் பிரியங்கா தாஸ். தற்போது இவர் சீரியலில் இருந்து திடீரென விலகி இருக்கிறார். இவருக்கு பதிலாக சாய் ரித்து என்ற நடிகை நடிக்கிறார். இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சீரியல் தொடங்கி ஒரு மாதம் ஆன நிலையில் நடிகை மாற்றம் செய்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement