‘இந்த படத்த பாத்தாவது திருந்துங்க’ – கலெக்ட்டருக்கு மாமன்னன் டிக்கெட்டை அனுப்பிய பா.ம.க நிர்வாகி.

0
1720
- Advertisement -

மாமன்னன் படத்தை பார்த்து திருந்துங்கள் என்று கோவை கலட்டரை விமர்சித்து பாமக நிர்வாகி பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன். இந்த படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருக்கிறார். இவர்களை தொடர்ந்து வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆ.ர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். மேலும், அனைவரும் எதிர்பார்த்த உதயநிதியின் மாமன்னன் படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. படத்தில் எல்லோரும் தனக்கு கீழ் தான் அடங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஆதி வர்க்கத்தினருக்கும், சமுதாயத்தில் முன்னேறி வாழ வேண்டும் என்று அனைவரையும் சமமாக பார்க்கும் பட்டியலின மக்களுக்கும், இடையே நடக்கும் போராட்டம் தான் மாமன்னன் திரைப்படம்.

- Advertisement -

மாமன்னன் படம்:

மேலும், இந்த படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும், அரசியலையும் ஆதிக்க வர்க்கத்தினர் எப்படி பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை இயக்குனர் கூறி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தினை பார்த்து முதல்வர் மு. க. ஸ்டாலின், கமலஹாசன், தனுஷ், ரஜினி உட்பட பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று இருக்கிறது.மேலும், இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாரி செல்வராஜுக்கு உதயநிதி அவர்கள் மினி கூப்பர் காரை பரிசளித்திருக்கிறார்.

படம் குறித்து சொன்னது:

படம் குறித்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதோடு சில நாட்களுக்கு முன் தான் இந்த படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டு இருந்தது. இந்நிலையில் கோவை கலெக்டரை விமர்சித்து பாமக நிர்வாகி பதிவிட்டு இருக்கும் ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலங்களில் ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் குறை தீர்க்கும் முகாம் நடைபெறும். அங்கு பொதுமக்கள் சென்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தங்களுடைய மனுக்களை கொடுப்பார்கள். அது தொடர்பாக அவர்களும் நடவடிக்கை எடுப்பார்கள்.

-விளம்பரம்-

அசோக் ஸ்ரீநிதி புகார் :

எந்த துறை குறித்த பிரச்சனை என்றாலும் அந்த நாளில் புகார் கொடுக்கலாம். இதுதான் தமிழகத்தில் உள்ள நடைமுறை. அந்த வகையில் கோவை மாவட்ட ஆட்சி தலைவர் கிராந்தி குமாரை அண்மையில் சந்தித்து மாவட்ட பாமக செயலாளர் அசோக் ஸ்ரீநிதி புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக தான் இவர் பதிவு போட்டிருக்கிறார். அதில் அவர், கோவை மாவட்ட ஆட்சி தலைவர் கிராந்தி குமார் அவர்களே நடிகர் உதயநிதி நடித்த மாமன்னன் படத்திற்கு டிக்கெட் உங்களுக்கு அனுப்பி இருக்கிறேன்.படத்தின் மையக்கருத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். குறைதீர்க்கும் முகாம் அன்று எங்கள் புகாரை பதிவு செய்ய மணி கணக்கில் நின்று ரசீதை பெற வேண்டும். பின்பு ரசீதை வைத்துக்கொண்டு முகாமின் அறை வராண்டாவில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டும்.

குறை தீர்க்கும் முகாம் குறித்து சொன்னது:

பின்பு உங்களை சந்திக்கும் போது நீங்கள் மேடையில் உட்கார்ந்து இருப்பீர்கள். நாங்கள் உங்கள் முன் “நின்று பேச வேண்டும்” உங்களை நாங்கள் அந்நார்ந்து பார்க்க வேண்டும். நீங்கள் எங்களை கீழே பார்ப்பது போல மேசை அமைக்கப்பட்டிருக்கும். உங்கள் செயல் நீங்கள் எங்களை விட மேலானவர் போலவும், உங்களைவிட நாங்கள் (மக்கள்) தாழ்வானவர் போலவும் இருக்கும். நாங்கள் ஏன் உங்கள் முன்பு நிற்க வேண்டும்? நீங்கள் வெறும் அரசு ஊழியர் தான். மக்களின் பிரச்சினையை தீர்ப்பது உங்கள் கடமை. மேடையில் இடமிருந்தும், மக்களை ஏன் நிற்கவைக்க வேண்டும்? உங்களின் முன் நாங்கள் உட்கார கூடாதா? உடனடியாக இதை சரி செய்யவும். இல்லையென்றால் அடுத்த முறை நான் நாற்காலியுடன் தான் வருவேன். தயவுசெய்து நடவடிக்கை எடுங்கள் ( தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோரை டேக் செய்து கோரிக்கை வைத்துள்ளார்) மக்களை தவறாக நடத்த வேண்டாம்” என்று கூறி இருக்கிறார்.

Advertisement