நான் இதனால் தான் பிக் பாஸ் வரவில்லை.! காரணத்தை சொன்ன பவர் ஸ்டார்.!

0
894
Actor-power-star

வானத்தில் இருப்பது ஒரே ஸ்டார், நிலவில் இருப்பதும் ஒரே ஸ்டார் அது தான் எங்கள் power ஸ்டார். தமிழ் சினிமாவின் இளம் ஹீரோ என்று தன்னை தானே அழைத்து வரும் பவர் ஸ்டாருக்கு பல கோடி ரசிகர்களும் உள்ளனர். ஆனால், பவர் ஸ்டாரின் ரசிகர்கள் மனதில் தற்போது இருக்கும் ஒரே கேள்வி பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் அவர் ஏன் பங்கேற்கவில்லை என்பது தான்.

power-star

விஜய் டிவியில் தற்போது ஒலிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 2 தொடங்குவதற்கு முன்பாகவே இதில் பங்குபெற போகும் போட்டியர்களில் பட்டியல் பல சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தன. அதில் அனைத்து பெயர் பட்டியலிலும் மிகவும் பொதுவாக காணப்பட்டது நடிகர் பவர் ஸ்டாரின் பெயர் தான். இதனால் இவர் கண்டிப்பாக பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்குபெறுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். ஆனால், இவர் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறமால் இருந்தது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தையே அளித்தது.

சமீபத்தில் இது குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்த நடிகர் பவர் ஸ்டார், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் பங்கு பெறாததர்க்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில்’என்னை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி பல முறை அழைப்புக்கக்ள் வந்தது, அவர்கள் அழைப்பை ஏற்று நானும் பல முறை விஜய் டிவிக்கு நேரில் சந்தித்து பேசினேன்.

Powerstar-Srinivasan

ஆனால், அப்போது நான் வேறு ஒரு படப்பிடிப்பில் இருந்து வந்ததால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது என்னுடைய தவறுதான். நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என்று எனது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர் ஆனால், என்னால் முடியவில்லை.அதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கண்டிப்பாக அடுத்த பிப் பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வேன் ‘ என்று கூறியுள்ளார்.