ஆடையால் பொது இடத்தில் அசிங்கப்பட்ட பிரபல நடிகை.! யார் தெரியுமா.! நடந்தது இதுதான்

0
1695
Kajol

பாலிவுட் நடிகையான கஜோல் நீண்ட வருடங்களாக ஹிந்தியில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர்.1999 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் அஜய் தேவை திருமணம் செய்து கொண்டார். தற்போது 42 வயதாகும் கஜோளுக்கு 15 வயதில் ஒரு மகளும்,8 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர்.

தற்போதும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் கஜோல் என்னற்ற தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான “வேலைக்காரன் 2” படத்திலும் நடித்து நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ – என்ட்ரி கொடுத்தார்.

சமீபத்தில் மும்பையில் உள்ள பீனிக்ஸ் மாலில் ‘இன்கிரிடிபல் 2 ‘ படத்தின் ப்ரோமோஷன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கஜோல் சற்று நீளமான வெள்ளை நிற ஆடை ஒன்றை அணிந்து வந்திருந்தார். அப்போது லாபியில் நடந்து சென்ற போது கால் தவறி கிழே விழுந்து விட்டார்.

உடனே அவரின் அருகில் இருந்த பாதுகாவலர்கள் அவரை கை தூக்கி விட்டனர். கீழே விழுந்ததில் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இதனால் பொது நிகழ்ச்சிக்கு வரும் பொது இடத்திற்கு ஏற்றவாறு உடை அணிந்துவந்தால் இப்படிப்பட்ட நிகழ்வுகளை தவிர்க்கலாம் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.அதுமட்டும் இன்றி அவர் காலில் அணிந்திருந்த High heels ஒரு காரணம்.தற்போது அந்த வீடியோ காட்சிகள் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வளைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.