உலக அளவில் இந்த கொரோனா வைரஸை ஒழிக்க பல்வேறு முயற்சிகள் செய்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதுவரை இந்தியாவில் 834 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் மற்றும் 19 பேர் உயிர் இழந்து உள்ளார்கள். கொரோனா வைரஸை எதிர்த்து அரசாங்கம்,காவல்துறை, மருத்துவர்கள் என அனைத்து துறையும் போராடி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்று பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை வீடியோக்கள் வந்துக் கொண்டே இருக்கின்றனர். கொரோனா வைரஸின் பரவலை தடுக்கும் விதமாக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதையும் பாருங்க : தனிமைபடுத்தப்பட்ட கமல், ஒட்டப்பட்ட ஸ்டிக்கர். மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை.
தங்களுடைய குடும்பங்களை மறந்தும், தன் உயிரை பணய வைத்தும் போராடி வருகின்றனர். சாலை ஓரங்களிலும், ஆங்காங்கே கும்பல் கும்பலாக நிற்கும் கூட்டங்களையும் காவல்துறையினர் அடித்து விரட்டுகின்றனர். வெளியில் வருபவர்களுக்கு அறிவுரை கூறியும் மீறி செய்பவர்களுக்கு தடியடி கொடுத்தும் வருகின்றனர். அந்த வகையில் மளிகை கடையில் நின்றிருந்த அரசாங்க அதிகாரிகள் மீது போலீசார் ஒருவர் தடியடி நடத்தி உள்ளார்.
தற்போது இது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக மளிகை கடை, காய்கறி கடை என அனைத்து இடங்களிலும் விலையை அதிகமாக வைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் மக்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. இந்நிலையில் மளிகை கடையில் விலை அதிகமாக வைத்து விற்பதை விசாரிக்க தாசில்தாரும், அரசு அலுவலர்களும் வந்து உள்ளார்கள்.
இதை அறியாமல் போலீசார் கூட்டமாக இருக்கிறது என்று வந்து திடீரென்று அங்கிருந்த அனைவர் மீதும் தடியடி நடத்தி உள்ளார். பிறகு தான் அங்கு உள்ளவர்கள் அரசு அதிகாரிகள் என்பது தெரியவந்தது. தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த கொரோனா வைரஸின் காரணமாக போலீசார் கும்பலாக இருப்பவர்களை என்ன ஏது என்று விசாரிக்காமலேயே வெறி கொண்டு தாக்குவது சட்டவிரோதமான செயல் என்று சோசியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன.