நடிகர் அதர்வா மீது போலீஸ் நிலையத்தில் புகார். இவரா இப்படி பண்ணாரு.

0
8348
atharva
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் முரளியின் மகனான அதர்வா 2010 ஆம் ஆண்டு திரையரங்கில் வெங்கடேஷ் தயாரித்து இயக்கிய ‘பானா காத்தாடி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதுவரை நடிகர் அதர்வா பத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் அதர்வா மீது மதியழகன் என்ற தயாரிப்பாளர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் அதர்வா கிக்காஸ் என்டர்டைன்மென்ட் என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி வைத்தார். மேலும், அதர்வா அறிமுகமான பானா காத்தாடி திரைப்படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கும் படத்தினை அதர்வா தயாரிப்பதாகவும் இருந்தது. இந்த அறிவிப்பை வெளியிட்ட சில வாரத்திலேயே அந்த படத்தில் தானே ஹீரோவாக நடிப்பதாக கூறியிருந்தார். பின்னர் அந்த திரைப்படம் செம போத ஆகாதே என்ற தலைப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி இருந்தது. இந்த படத்தை தனது சொந்த தயாரிப்பில் தயாரித்திருந்த அதர்வா தயாரிப்பாளர் மதியழகன் என்பவருக்கு 5.5 கோடி ரூபாய்க்கு விநியோகஸ்தர் உரிமையை வழங்கியிருந்தார்.

இதையும் பாருங்க : பிரச்சனை தாங்கள. குடும்பத்துடன் இருக்க முடியல. குஷ்பு எடுத்த அதிரடி முடிவு.

- Advertisement -

மேலும், படத்திற்கு ஏற்பட்ட தாமதத்தினாலும் மோசமான கதைக்களத்தாலும் இந்த படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இதனால் இந்த படத்தை விநியோகம் செய்த மதியழகனுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தினால் தனக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள மதியழகன், இந்த படத்தில் தனக்கு ஏற்பட்ட 5.5 கோடி நஷ்டம் குறித்து அவரிடம் கேட்டபோது அவர் எந்த பதிலையும் அளிக்கவில்லை. இதனால் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நான் புகார் அளித்திருந்தேன். பின்னர் அவர் எனக்கு பணத்தைத் திருப்பித் தருவதற்கு பதிலாக ஒரு படத்தில் நடித்துக் கொடுக்கிறேன் என்று கூறியிருந்தார். மேலும், அதற்காக பூஜைகள் என்கூட போடப்பட்டது. படத்திற்கு மின்னல் வீரன் என்ற தலைப்பை வைத்து அந்த படத்திற்காக 50 லட்சம் செலவு செய்திருந்தோம்.

ஆனால், மீண்டும் ஏமாற்றிய அதர்வா, சரியாக படப்பிடிப்புக்கு வரவில்லை இந்த படம் வெளியாகாததால் எனக்கு ‘செம போத ஆகாதே’ படத்தையும் சேர்த்து ஆறு கோடி ரூபாய் நஷ்டம் அடைந்திருக்கிறது. நான் அவரிடம் பணத்தை திருப்பி கேட்ட போது மூன்று மாதத்தில் கொடுத்துவிடுகிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால், நான் ஒரு வருடமாக காத்துக்கொண்டிருக்கிறேன் இதுவரை எந்த பணமும் எனக்கு கிடைக்கவில்லை. இதனால் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் மதியழகன்.

-விளம்பரம்-

ஏற்கனவே அதர்வா நடித்த ‘100’ படம் இது போன்ற சிக்கலை சந்தித்திருந்தது. இந்த படத்தை தயாரித்திருந்த எம்.ஜி.ஆரா சினிமாஸ் நிறுவனம், பலூன் படத்தை வெளியீட்டு உரிமைக்காக தரவேண்டிய ஒரு கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதாகவும், அத்தொகையை தராமல் நூறு படத்தை வெளியிட தடை விதிக்க கோரி 70 எம் எம் எண்டர்டய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குப்தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், நூறு படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement