மருத்துவரால் ஏற்பட்ட சர்ச்சை, பாக்கியலட்சுமி தொடரின் மீது போலீசில் புகார். அதிர்ச்சியில் ரசிகர்கள் – காரணம் என்ன தெரியுமா ?

0
312
Baakiyalakshmi
- Advertisement -

பாக்யலக்ஷ்மி தொடரின் இயக்குநர் மீது புகார் அளித்துள்ள சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்று வருகிறது. ஆகையால் ஒவ்வொரு சேனலும் தங்கள் சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக புதுப்புது வித்தியாசமான தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், அவரின் கணவராக சதீசும் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Baakiyalakshmi Serial Suchitra On Top 5 | பாக்கியலட்சுமி சீரியல்

மேலும், இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாகவும் பாக்கியலட்சுமி திகழ்கின்றது. இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்தி உருவாகி உள்ள கதை. மேலும், நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் வீட்டில் உள்ள பெண்களுக்கு ஒரு உதாரணமாக, தைரியமாகவும் இருக்கிறது. பெண்கள் குடும்பத்தை பார்த்துக் கொண்டாலும் தனக்கு என்று ஒரு வேலை இருக்க வேண்டும்,

- Advertisement -

பாக்கியாவின் கதாபாத்திரம்:

பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை உணர்த்துகிறது. தற்போது இந்த சீரியலில் கோபி இரண்டாவது திருமணம் செய்யப் போகிறார். உண்மை தெரிந்தவுடன் கோபியின் அப்பா மனமுடைந்து மாடியிலிருந்து கீழே தவறி விழுந்து பேச முடியாமல், நடக்க முடியாமல் போகிறது. செழியன் பாக்கியாவிடம் சண்டை போட்டு தனிக்குடித்தனம் செல்ல முடிவெடுக்கிறார். இதையெல்லாம் பார்த்த கோபி, இதுதான் சாக்கு என்று ராதிகா வீட்டிற்கு போய் தங்குகிறார். செல்விக்கு கோபி மீது அதிகமாக சந்தேகம் வருகிறது. பின் செழியன் தனக்கு திருமணம் செய்தது பிடிக்கவில்லை.

Baakiyalakshmi Serial Aryan Quits | பாக்கியலட்சுமி ஆர்யன்

பாக்யலக்ஷ்மி சீரியல் கதை:

விவாகரத்து செய்யலாம் என்று தோன்றுவதாக கூறினார். இதனால் கோபமடைந்த பாக்கியா தனது மகனை பளார் என்று அடித்து பயங்கரமாக திட்டுகிறார். இதை பார்த்த கோபி அதிர்ச்சியில் இருக்கிறார். அவருக்கே சொல்வது போல உணர்கிறார். இருந்தாலும் பாக்கியாவை எப்படியாவது விவாகரத்து? செய்து விட வேண்டும் என்று பல திட்டங்களை போட்டுக் கொண்டு வருகிறார். இந்த எபிசோடை பார்ப்பதற்காக ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் பாக்கியா கணவர் கோபி எப்போது மாற்றிக்கொள்வார்?

-விளம்பரம்-

பாக்யலக்ஷ்மி சீரியல் மீது எழுந்து உள்ள காரணம்:

முக்கியமாக ராதிகாவிடம் எப்போது மாற்றுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இந்த தொடர் மீது போலீசில் புகார் பதிவு ஆகியுள்ள சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது என்னவென்றால், பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மாமனார் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்தப் படுக்கையாக இருப்பது போல காட்டப்பட்டு வருகிறது. அவருக்கு சிகிச்சை அளிக்க பிசியோதெரபிஸ்ட் ஒருவர் வருகிறார். அவரை பாக்யாவின் மகள் இனியா காதல் செய்கிறாள்.

போலீஸ் புகாருக்கு காரணம்:

இதுபற்றி அறிந்த பாக்கியா குடும்பத்தினர் பிசியோதெரபிஸ்ட்டையும் , அவருடைய தொழிலையும் தவறாக பேசுவது போல் வருகிறது. இந்த நிலையில் இதை எதிர்த்து சீரியலின் இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பு நிறுவனம் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு பாக்கியலட்சுமி தொடர் சார்பில் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வருத்தத்துடன் கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.

Advertisement