தொடர்ந்து நடிகைகள் குறித்து ஆபாசமான பேச்சுக்கள் – பயில்வான் மீது போலீசில் புகார். யார் கொடுத்துள்ளது பாருங்க.

0
350
- Advertisement -

பயில்வான் ரங்கநாதனை கைது செய்ய வேண்டும் என்று போலீசில் புகார் அளித்து உள்ள சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து இருக்கிறார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். அதோடு இவர் நீண்ட காலமாகவே பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். அதனால் சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் இருந்து வருவதால் சினிமா நட்சத்திரங்களைப் பற்றி அறியாத பல ரகசியங்களை தன்னுடைய பத்திரிக்கையின் மூலம் வெளியிட்டு வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து உள்ளார். அதனால் இவருக்கும் சினிமா துறையை சேர்ந்த பிரபலங்களுக்கும் இடையயே வாக்குவாதம் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், வரும் எதிர்ப்புகளுக்கும் பதிலடி கொடுத்து தன்னுடைய வேலையை தொடர்ந்து செய்து வருகிறார் பயில்வான். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் சினிமா பிரபலங்களை பற்றி பேச ஆரம்பித்த பின் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார்.

இதையும் பாருங்க : சாமியை தொடர்ந்து மீண்டும் தன் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கும் லிங்குசாமி (மறுபடியும் Tune ஆகி இருக்கார் போல)

- Advertisement -

பயில்வான் ரங்கநாதன் வீடியோ:

அதிலும் சமீப காலமாக இவர் நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் எப்படி நடிகைகளுக்கு விவாகரத்து ஆனது என்பது குறித்தும், நடிகைகளுக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்தும் பல்வேறு சர்ச்சைகளை பேசி வருகிறார். இதனால் இவருடைய வீடியோக்களுக்கு பல லட்சம் வியூவர்ஸ் இருக்கிறார்கள். சமீபத்தில் கூட பயில்வான் ரங்கநாதன் மீடு புகார் அளிக்கும் நடிகைகள் குறித்து கொச்சையாக பேசி வீடியோ பதிவிட்டு இருக்கிறார். இதனால் பாடகி சின்மயி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் பயில்வான் மீது கடுமையாக கண்டனம் தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Bigg Boss Oviya Slams Bayilwan Ranganathan For Shaming Her

பயில்வான் ரங்கநாதன் மீது போலீசில் புகார்:

சில தினங்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு தனது ட்விட்டர் பக்கத்தில் பயில்வான் ரங்கநாதன் குறித்து பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் அவர், பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்தும் பயில்வானை குண்டர் சட்டத்தில் தள்ள வேண்டும் என்று பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் பயில்வான் ரங்கநாதனின் ஆபாச பேச்சால் கொந்தளித்துப் போய் பெண்கள் பயில்வான் ரங்கநாதன் மீது போலீசில் புகார் அளித்து இருக்கிறார். மேலும், இது தொடர்பாக பேட்டியில் அவர்கள் கூறியிருப்பது, பெண்களை பர்சனலாக தாக்கிப் பேசுவது சகிக்க முடியாத ஒன்று. தொடர்ந்து பெண்கள் குறித்து ஆன்லைனில் ஆபாசமாக பேசி வரும் பயில்வான் ரங்கநாதன் மீது எதிர்த்து குரல் கொடுத்தோம்.

-விளம்பரம்-

பயில்வான் ரங்கநாதன் செய்த காரியம்:

ஆனால், இப்போது தான் நாங்கள் அவர் மீது போலீசில் புகார் அளித்து இருக்கிறோம். அவர் மீது ழ் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனரிடம் கேட்டு இருக்கிறோம். பயில்வான் ரங்கநாதனை தொலைக்காட்சி வாயிலாக கூப்பிட்டு வைத்து பேசுவதெல்லாம் தேவையில்லாத ஒன்று. பெண்கள் குறித்து அவர் பேசும் அசிங்கமான வார்த்தைகளை கேட்க முடியவில்லை. அவர் பெயரை போட்டாலே யூடியூபில் அவ்வளவு அசிங்கமான வார்த்தைகளும், கேவலமான டைட்டில்கள் தான் வருகிறது. உள்ள போய் கேட்க கூட முடியாது. போன வாரம் ஒரு வீடியோ போட்டு இருந்தார். அதனால் தான் எங்களால் தாங்க முடியாமல் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து இருக்கிறோம்.

பெண்களை பற்றி தவறாக பேச காரணம்:

இதற்கு முன்னாடி ஆன்லைனில் ஆபாசமாக பேசிய பல நபர்கள் மீதும் நாங்கள் புகார் கொடுத்து இருக்கிறோம். அனால், இதுவரை ஆக்ஷனும் எடுக்கவில்லை. இதேபோல் தொடர்ந்து பெண்களைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தால் பொறுத்துக் கொள்ள முடியாது. பெண்கள் குரல் கொடுத்தாலே அவர்களை தவறாக பேசி வெளியே வராமல் பண்ணுகிறார்கள். அவர்களுக்கு என்று பேசும் சுதந்திரம் கிடைக்க மாட்டேங்கிறது. அரசியல் பேசினாலும், எது பேசினாலும் பெண்களை பயங்கரமாக தாக்கி பேசுகிறார்கள். பல பெண்கள் தைரியமாக பேச வெளியே வந்தாலும் அவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் அசிங்கமாக பேசுகிறார்கள். இதனால் யாருமே பேச முன்வர பயப்படுகிறார்கள். இதில் பயில்வான் ரங்கநாதன் மட்டும் இல்லை. இவர் நமக்கு தெரிகிறது இவரைப் போன்று தெரியாமல் பல பேர் ஆன்லைனில் பேசி வருகிறார்கள் என்று கூறி இருக்கிறார்.

Advertisement