பொன்னியின் செல்வன் பார்ட் 2ல மட்டும் இப்படி இருந்துச்சி – இயக்குனர் கௌதமன் எச்சரிக்கை.

0
351
gowthaman
- Advertisement -

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் உண்மையான வரலாறு மறைக்கப்பட்டு இருக்கிறது என்று இயக்குனர் வ.கெளதமன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவின் 70 ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை தற்போது திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார். இந்த கதையை பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரகுமான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த பொன்னியின் செல்வன் படம் சமீபத்தில் தான் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. மேலும், தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி வருகின்றனர். படம் வெளியாகி ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என அனைவரும் மத்தியிலும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

படத்தின் வசூல்:

அதோடு படம் வெளியாகி மூன்று நாள் முடிவில் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்திருக்கிறது.
விக்ரம், வலிமை போன்ற படங்களின் மூன்று நாள் வசூலை காட்டிலும் பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய அளவில் வசூல் செய்திருக்கிறது. இனிவரும் நாட்களில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் குறித்து இயக்குனர் வ.கெளதமன் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனரும், நடிகராகவும் இருப்பவர் வ. கௌதமன்.

-விளம்பரம்-

வ.கெளதமன் அளித்த பேட்டி:

இவர் சமீபத்தில் தலைமைச் செயலாளர் இறையன்புவை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் பொன்னியின் செல்வன் படம் குறித்து கூறியிருந்தது, சோழப் பேரரசு மட்டும் 350 ஆண்டுகளாக தமிழ் நிலத்தை ஆண்ட வரலாறு இருக்கிறது. ஆனால், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தமிழனாக இருந்து சொல்லவில்லை என்றாலும் உண்மையான வரலாற்றை சொல்லி இருக்க வேண்டும். சோழர்களின் சின்னம் புலி கொடி. இதை ஒரு இடத்தில் கூட படத்தில் காட்டவில்லை. அப்படி என்ன வரலாற்று ஆய்வு செய்துள்ளார்கள்? ஜெயமோகன் சோழர்களை தெலுங்கர்கள் என குறிப்பிடுகிறார். படைப்பாளிகள் உண்மையை பேச வேண்டும். ஆளுமையோடு படைப்பை உருவாக்க வேண்டும்.

வ.கெளதமன் விடுத்த எச்சரிக்கை:

ஆதித்ய கரிகாலன் பிராமணர்களால் தான் கொல்லப்பட்டான். ஆனால், பாண்டியர்களை குற்றம் சாட்டுவதைப் போன்று பொன்னியின் செல்வனில் இருக்கிறது. இது வட தமிழகத்திற்கும் தென் தமிழகத்திற்கும் இடையே பிரச்சனையை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கிறது. சைவம், வைணவம் மட்டுமே தமிழர் சமயம். இந்து மதம் வெள்ளையர்கள் வருவதற்கு முன்பு கிடையாது. புலி கொடியை வைத்தால் மத்திய அரசு தடுக்கும் என்பதற்காக மறைத்தார்களா? பொன்னியின் செல்வன் படத்தில் வரலாற்றை மடை மாற்றம் செய்திருக்கிறார்கள். இரண்டாம் பாகத்தில் இதே மாதிரி இடம்பெற்று இருந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். தமிழர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்துவேன் என்ற எச்சரித்து இருக்கிறார்.

Advertisement