RRR படத்திற்காக ஆஸ்கர் விருது கிடைக்க ராஜமவுலி முயற்சிக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய சினிமா உலகையே திரும்பிப் பார்க்க வைத்த படங்களில் ஒன்று பாகுபலி. பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பின் இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த படம் RRR. இந்த படம் ஐந்து ஆண்டுகள் கழித்து திரைக்கு வெளியாகி இருக்கிறது. RRR என்பது இரத்தம் ரணம் ரெளத்திரம் என்று பொருள்.
இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். இவர்களுடன் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி போன்ற பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தை டிவிவி நிறுவனம் தயாரித்து இருந்தது. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி இருந்தது. இந்த படம் மிக பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது.
RRR படம்:
மேலும், படம் வெளியாகி இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. வசூலிலும் இந்த படம் கோடிக்கணக்கில் குவித்து இருந்தது. மேலும், படத்தில் VFX காட்சிகள் அற்புதமாக இருக்கிறது. அதோடு ஆக்ஷன் காட்சிகளும் மெய் சிலிர்க்க வைக்கிறது. குறிப்பாக ‘நாட்டு நாட்டு’ என்ற பாடல் பட்டி ‘நாட்டு எங்கும் பிரபலமானது. இந்த படம் குறித்து பலமொழி பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
ஆஸ்கர் விருது:
இந்நிலையில் ஆஸ்கர் விருது பட்டியலில் RRR படம் இடம்பெறும் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. இதில் சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் போட்டியிட இந்த வருஷம் இந்தியா சார்பில் இயக்குனர் ராஜமவுலியின் RRR , தி காஷ்மீர் ஃபைல்ஸ், மாதவனின் ராக்கெட்ரி போன்ற படங்கள் தேர்வாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆஸ்கர் விருதுக்கு தேர்வான படம்:
பின் ஹாலிவுட்டின் முன்னணி இயக்குனர்கள் பலர் RRR படத்தை கலந்து ஆலோசித்து இருக்கிறார்கள். இதனால் நிச்சயம் இந்திய சார்பாக RRR படம் ஆஸ்கர் விருது போட்டிக்கு செல்லும் என முதற்கட்டமாக தகவல் தெரிந்திருக்கிறது. இந்த நிலையில் குஜராத்தின் திரைப்படமான ‘Chhello Show’ (The Last Film Show) படம் இந்திய சார்பாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் ஸ்பெஷல் என்ட்றியாக தனிப்பட்ட முறையில் கட்டணம் செலுத்தி ஆர்ஆர்ஆர் படத்தை ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பெற செய்ய ராஜமவுலி தீவிர முயற்சியில் இறங்கி இருக்கிறார்.
ராஜமௌலி செய்த முயற்சி:
அதுமட்டுமில்லாமல் ‘For your consideration (FYC)’ என்ற விளம்பர யுக்தி மூலம் திரைத்துறையை சேர்ந்த முக்கிய நபர்களுக்கு ஆர்ஆர்ஆர் படத்தை ராஜமௌலி திரையிட்டு காட்டி இருக்கிறார். இதன் மூலம் இந்த படத்தை சிறந்த இயக்குநர் (ராஜமௌலி),
சிறந்த நடிகர் (ஜூனியர் NTR, ராம் சரண்),
சிறந்த துணை நடிகர் (அஜய் தேவ்கன்),
சிறந்த துணை நடிகை (அலியா பாட்),
சிறந்த ஒரிஜினல் திரைக்கதை,
சிறந்த பின்னணி இசை,
சிறந்த பாடல்,
சிறந்த ஒளிப்பதிவு,
சிறந்த vfx, சிறந்த ஒலி வடிவமைப்பு,
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு,
சிறந்த ஒப்பனை மற்றும் அலங்காரம்,
சிறந்த பாடல் (நாட்டு நாட்டு),
சிறந்த ஆடை வடிவமைப்பு என 15 பிரிவுகளில் விண்ணப்பித்திருக்கிறார். இதில் ஏதேனும் ஒன்றிலாவது RRR படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்ற முயற்சியில் ராஜமவுலி இருக்கிறார். ராஜமௌலின் இந்த முயற்சி வெற்றி அடையுமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.