அருள் மொழியா? அருண் மொழியா? சர்ச்சைக்கு பொன்னியின் செல்வன் படக்குழு விளக்கம்.

0
388
jayamravi
- Advertisement -

பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜ சோழனின் பெயர் குறித்து எழுந்த சர்ச்சைக்கு படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் மணிரத்தினம். இவர் வித்யாசமான கதைகளை இயக்கி உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர். தமிழ் திரையுலகில் ஒரு இயக்குநருக்கு இவ்வளவு ரசிகர் பட்டாளமா! என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு இயக்குநர் மணிரத்னமிற்கு ரசிகர்கள் உள்ளனர். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ‘பொன்னியின் செல்வன்’.` பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதை தற்போது திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் சாதித்து காட்டி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : இந்தியாவின் டாப் 10 நடிகைகள் – No.1 சமந்தா No.3ல் நயன். நேஷனல் கிரஸ் ராஷ்மிகாவிற்கு No இடம்.

பொன்னியின் செல்வன் படம்:

பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்தத் திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களான பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

படத்தின் டீசர் :

இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடவிருக்கிறார்கள். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும், சைடில் டெக்னிகல் ஆகவும் பணியாற்றி இருக்கிறார்கள். தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டது. இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அனைவரும் எதிர்பார்த்திருந்த பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது.

ராஜராஜ சோழனின் பெயர் குறித்த சர்ச்சை:

இந்த விழாவில் படத்தின் நடிகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த டீசர் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே பொன்னியின் செல்வனாக படத்தில் ஜெயம் ரவியின் கதாபாத்திரம் அருண்மொழிவர்மன் என்று படக்குழுவினர் குறிப்பிட்டு இருந்தனர். ஆனால், ராஜராஜ சோழனின் பெயர் அருள்மொழிவர்மன் என்றும், வரலாற்றை தவறாக பதிவு செய்திருப்பதாகவும் சர்ச்சைகள் இருந்தது. அதே நேரம் இலக்கண விதிப்படி அருள்மொழி வர்மன் என்ற பெயரை, அருண்மொழி வர்மன் என்று எழுதுவது தான் சரி என மொழியியலாளர்கள் கூறியிருந்தனர்.

விளக்கம் கொடுத்த படக்குழுவினர்:

இந்த நிலையில் அருண் மொழியா, அருள்மொழியா என்பது குறித்த சர்ச்சைக்கு படக்குழுவினர் விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர். அதில், அருண்மொழிவர்மன் என்ற பெயர் ராஜராஜ சோழனின் பெயர் என்பது தெளிவாகி இருக்கிறது. ஏற்கனவே ஆதித்த கரிகாலனாக நடித்திருக்கும் விக்ரம் நெற்றியில் நாமம் இருக்கிறது என்றும், த்ரிஷாவின் உடை குறித்தும் பல விமர்சனங்கள் எழுந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement