சோழ மன்னர்களுக்கு இது பழக்கம் இல்லை – நோட்டீஸ் வரை சென்ற விவகாரத்துக்கு விக்ரம் போஸ்டர் மூலம் முற்றுப்புள்ளி வைத்த மணிரத்னம்.

0
309
ponniyin
- Advertisement -

பொன்னியின் செல்வன் படத்தின் மீது வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் மணிரத்தினம். இவர் வித்யாசமான கதைகளை இயக்கி உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் தற்போது பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம்.

-விளம்பரம்-

அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் சாதித்து காட்டி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்தத் திரைப்படம் தயாராகி இருக்கிறது. மேலும், இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : மீரா மிதுன் மீது ஜோ மைக்கேல் போட்ட வழக்கு, 3 ஆண்டுகள் கழித்து நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு. மீண்டும் சிக்கலில் சூப்பர் மாடல்.

பொன்னியின் செல்வன் படம்:

மேலும், இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ரவி, த்ரிஷா என சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களான பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடவிருக்கிறார்கள். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும், சைடில் டெக்னிகல் ஆகவும் பணியாற்றி இருக்கிறார்கள். தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டது.

-விளம்பரம்-

பொன்னியின் செல்வன் படத்தின் டீசர்:

இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சமீபத்தில் தான் படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. டீசர் குறித்து பலரும் பாராட்டி இருந்தார்களால். இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதாக கூறி இயக்குனர் மணிரத்னம், விக்ரம் உள்ளிட்டோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

வக்கீல் அனுப்பிய நோட்டீஸ்:

அதாவது வக்கீல் அனுப்பிய நோட்டீஸில் கூறி இருப்பது, அமரர் கல்கியின் பிரபலமான நாவலான பொன்னியின் செல்வன் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது பொன்னியின் செல்வன் திரைப்படம். தஞ்சையை ஆண்ட சோழ மன்னர்களின் வரலாற்றின் அடிப்படையில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் உருவாக்கி இருக்கிறார். சோழர்களின் வம்சத்தில் நாமம் இடும் பழக்கம் இல்லை.

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி :

ஆனால், பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்திய கரிகாலன் பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் விக்ரம் நெற்றியில் நாமம் இடப்பட்டு உள்ளது. இயக்குனர் மணிரத்னம் இதேபோல இன்னும் எத்தனை வரலாறுகள் மறைத்து உள்ளார் என்பதை படம் பார்த்தால் தான் தெரிந்து கொள்ள முடியும். படத்தை வெளியிடும் முன் தங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். தங்களுக்கு திரையிட்டு காட்டாமல் படத்தை வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுஇருந்தது. இப்படி ஒரு நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது சிங்கிள், ‘சோழா சோழா’ வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி, மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் வெளியிடப்பட்டுள்ள விக்ரமின் போஸ்டரில் அவரது நெற்றியில் திருநீர் பட்டை பூசப்பட்டு இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது படக்குழு.

Advertisement