கயிர்ல இருந்து சட்ட வரை சாமி தான், இதுக்கு ஆட்சிக்கு வந்தீங்க – விஜய் சேதுபதியை தொடர்ந்து வைரலாகும் பொன்வண்ணன் பேச்சு

0
558
- Advertisement -

விஜய் சேதுபதியை தொடர்ந்து பாஜகவை விமர்சித்து நடிகர் பொன்வண்ணன் பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் குறித்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

-விளம்பரம்-

மேலும், தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, மற்றும் பாஜக கூட்டணி என்று மூன்று அணிகளும், நாம் தமிழர் கட்சி மற்றும் தனித்து நிற்கிறது. எனவே நான்கு கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. இதில் பாஜக தலைமையில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், சமத்துவ மக்கள் கட்சி போன்ற பல கட்சிகள் கூட்டணி வைத்திருக்கிறது. கடந்த சில தினங்களாகவே இது தொடர்பான பேச்சுவார்த்தை தான் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

வீடியோவில் விஜய் சேதுபதி சொன்னது:

அதேசமயம் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. இன்னொரு பக்கம் கட்சிகள் வழக்கம் போல் எதிர் அணியை விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் ஏற்கனவே நடிகர் விஜய் சேதுபதி பேசி இருந்த பழைய வீடியோ சோசியல் மீடியாவில் சர்ச்சை கிளப்பி இருக்கிறது. அதில் அவர், அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே, தயவு செய்து சிந்தித்து ஓட்டு போடுங்கள். பார்த்து ஓட்டு போடுங்கள்.

மதம் குறித்து சொன்னது:

ஓட்டு போடுவது ரொம்ப முக்கியம். எப்போதும் நம் ஊரில் ஒரு பிரச்சனை, கல்லூரியில் ஒரு பிரச்சனை, பள்ளியில் பிரச்சனை, நண்பர்களுக்கு பிரச்சனை என்று கூப்பிடுபவர்களை நம்பி ஓட்டு போடலாம். ஆனால், மதம்- ஜாதியை வைத்து பேசுபவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள். அவர்கள் உங்களை கோர்த்துவிட்டு அவர்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்று பேசி இருக்கிறார். பாஜக மோடியை விமர்சித்து தான் இவர் பேசுகிறார் என்று சொல்லி இருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகர் பொன்வண்ணன் பாஜக விமர்சித்து பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

பொன்வண்ணன் வீடியோ:

அதில் அவர், என்னுடைய பெயர் கடவுள் முருகர் பெயர் தான். எனக்கு மட்டும் இல்லை என்னுடைய வீட்டில் எல்லாருமே கடவுளின் பெயரை தான் வைத்திருக்கிறார்கள். நாம் கடவுளின் பெயரை வைத்தும், கடவுளுடைய கயிறை கையில் கட்டி, நெற்றியில் திருநீர் வைத்து, சாப்பிடும் சாப்பாடு, நாட்கள், கிழமை, உடை என அனைத்திலும் கடவுளை பார்க்கிறோம். கடவுள் சம்பந்தப்பட்ட பொருட்கள் தான் இருக்கிறது. இப்படி இருக்கும் போது கடவுளை நீங்கள் ஏன் காப்பாற்ற போராடுகிறீர்கள்? இதற்காகவா உங்களை ஓட்டு போட்டு மக்கள் அழைத்து வந்தார்கள்.

பாஜக குறித்து சொன்னது:

எவ்வளவோ மக்கள் கஷ்டப்பட்டு போராடி, பிரச்சனையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை சரி செய்யுங்கள். கடவுளையும் மதத்தையும் காப்பாற்ற உங்களை யாரும் ஓட்டு போட்டு வர வைக்க வில்லை. முன்பெல்லாம் முதியோர்களுக்கு ரயிலில் இலவச டிக்கெட் கொடுத்தார்கள். ஆனால், இப்போது அந்த டிக்கெட்டை நிறுத்தி விட்டார்கள். கொரோனா பீரியடில் ஒரு வண்டி கூட இயங்கவில்லை. அதற்கு பிறகு எல்லாவற்றிலும் அதிக காசு கொடுத்து தான் செல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். மேலும், கொரோனா பிரச்சனையின் போது ஏன் ராணுவத்திலிருந்து வண்டிகளை வரவைத்து மக்களுக்கு உதவி செய்யவில்லை? தமிழ்நாட்டில் இருந்து பீகார், டெல்லிக்கு நடந்தே சென்று இருக்கிறார்கள். அதையெல்லாம் எடுத்து மதத்தை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் உங்களுக்கு கொடுத்த வேலையை செய்யுங்கள் என்று கடுமையாக விமர்சித்து பேசி இருக்கிறார்.

Advertisement