எனக்கும் கமலுக்கும் இருக்கும் உறவு இதுதான் – போட்டுடைத்த பூஜா குமார்.

0
20570
pooja
- Advertisement -

இந்திய திரைப்படங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பூஜா குமார். இவர் இந்தோ-அமெரிக்க நடிகை ஆவார். இவர் தமிழில் நடிப்பதற்கு முன்னாடி நிறைய ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். நடிகை பூஜா குமார் இருபது ஆண்டுகளுக்கு மேலாக இந்திய திரைப்படத்துறையில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் மிஸ் இந்தியா யுஎஸ்ஏ என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் முதன் முதலாக 2000 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் ரோஜாவே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த விஸ்வரூபம் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டார். அதனைத் தொடர்ந்து இவர் விஸ்வரூபம்-2, உத்தமவில்லன் போன்ற படங்களில் கமலஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு இவருக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே இருக்கும் உறவு குறித்து சோசியல் மீடியாவில் பல வதந்திகளும் சர்ச்சைகளும் எழுந்தன.

இதையும் பாருங்க : அவர்கள் உள்ளத்தில் விஷயத்தை விளைவிக்காதீர்கள்- கௌதம் மேனனுக்கு அட்வைஸ் செய்த திரௌபதி இயக்குனர்.

- Advertisement -

இந்நிலையில் நடிகை பூஜா குமார் அவர்கள் தனக்கும் கமலுக்கு இடையே உள்ள உறவை குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து உள்ளார். அதில் அவர் கூறியது, கமல் சாரையும் அவரது குடும்பத்தினரையும் எனக்கு ரொம்ப நாளாகவே தெரியும். நான் அவரோட நடிக்கத் தொடங்கியதிலிருந்தே அவரது குடும்பத்திடம் எனக்கு நல்ல பழக்கம். தயாரிப்பாளராக இருக்கும் அவரது சகோதரர், அவரது மகள்கள், எல்லாரும் அப்படித்தான் என்னிடம் பழக்கமானாங்க.

அதனால் நான் அவர்கள் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன். கமலின் அடுத்த படமான ‘தலைவன் இருக்கிறான்’ படத்தில் நான் நடிப்பதாக பல தகவல் வந்து உள்ளது. அது எல்லாம் உண்மை இல்லை. நான் அந்தப் படத்தில் நடிக்கவில்லை. இதுவரை எதுவும் ஃபிக்ஸ் இல்லை. ஆனால், என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும் என்று கூறினார் பூஜா. இப்படி நடிகை பூஜா குமார் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement