அவர மதிக்காவிட்டாலும் பரவாயில்லை, மிதிக்காதிங்க – தெறி ரீமேக்கை கண்டு கடுப்பான நடிகை

0
2333
Theri
- Advertisement -

நடிகர் பவன் கல்யாண் போஸ்டரை கண்டித்து நடிகை பூனம் கௌர் பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பவன் கல்யாண். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவரை பவர் ஸ்டார்ட்’ என்று தான் அழைக்கிறார்கள். இவர் தனது நேர்மையான நடிப்பிற்கும் துணிச்சலான ஆளுமைக்கும் காரணமாக எண்ணற்ற ரசிகர்களை கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது பவன் கல்யாண் அவர்கள் உஸ்தாத் பகத்சிங் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ் திரை உலகில் விஜய் நடிப்பில் வெளிவந்திருந்த தெறி படத்தின் ரீமேக். கடந்த 2016ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் தெறி. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். மேலும், இப்படத்தில் எமி ஜாக்சன், மீனா மகள் பேபி நைனிகா, பிரபு, ராதிகா போன்ற பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

- Advertisement -

பவன் கல்யாண் நடிக்கும் படம்:

எதிர்பார்த்த படியே இப்படமானது தெறி படக்குழுவினருக்கு வெற்றித்திரைப்படமாக அமைத்திருந்தது.
தற்போது இந்தப் படத்தை தான் தெலுங்கில் உஸ்தாத் பகத்சிங் என்ற பெயரில் பவன் கல்யாண் நடித்து வருகிறார். இந்த படத்தை ஹரிசங்கர் இயக்கி வருகிறார். மேலும், இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிறது.

போஸ்டர் குறித்த சர்ச்சை:

இந்த போஸ்டர்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இந்த நிலையில் நடிகை பூனம் கௌர் அவர்கள் இந்த படத்தின் போஸ்டருக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து வரும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, பவன் கல்யாண் நடித்திருக்கும் உஸ்தாத் பகத்சிங் படத்தின் போஸ்டரில் பவன் கல்யாண் காலுக்கு கீழே பகத்சிங் பெயர் இருக்கிறது. இதை சுட்டிக்காட்டி தான் நடிகை பூனம் கௌர் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

பூனம் கௌர் பதிவு:

அதில் அவர், இது சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கை அவமதிக்கும் செயல். புரட்சியாளர்களை உங்களால் மதிக்க முடியவில்லை என்றாலும் அவர்களை மிதிக்காமல் இருங்கள். மேலும், அந்தப் போஸ்டரில் பகத்சிங் பெயரை காலுக்கு கீழே வைத்து அவமானப்படுத்தியது தெரியாமல் நடந்ததா? இல்லை வேணும் என்று செய்ததா? என்றும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இப்படி பவன் கல்யானுக்கு எதிராக நடிகை பூனம் கௌர் பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

பூனம் கௌர் திரைப்பயணம்:

தென்னிந்திய சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் பூனம் கவுர். இவர் மாயாஜாலம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதன் பின் தமிழில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய நெஞ்சிருக்கும் வரை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. முதல் படத்திலேயே பூனம் கவுர் தமிழக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதன்பிறகு இவர் பல படங்களில் நடித்திருந்தார்.

Advertisement