நடிகை கனகாவின் தனிமைக்கு காரணம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 80, 90 காலகட்டங்களில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர் நடிகை கனகா. இவர் மறைந்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். நடிகை கனகா அவர்கள் ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக், மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து இருக்கிறார்.
இவர் 2007 ஆம் ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த பொறியாளர் முத்துக் குமார் என்பவரை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் திருமணம் முடிந்து சில நாட்களிலேயே முத்துக்குமாரை காணவில்லை. மேலும், இவருடைய திருமண வாழ்க்கை பற்றி இன்று வரை தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. அதோடு சில வருடங்களாகவே கனகாவை பற்றி எந்த தகவலும் தெரியாமல் இருந்தார்.
கனகா குறித்த சர்ச்சை:
இதனால் பலரும்கனகா இறந்து விட்டார் என்றெல்லாம் வதந்திகளை கிளப்பி விட்டார்கள். பின் கடந்த ஆண்டு நடிகை கனகா பேசிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வந்தது. அந்த வீடியோவில் நடிகை கனகா , எனக்கு தற்போது படத்தில் நடிக்க ஆசை வந்துள்ளது. ஆனால், எனக்கு இப்போது 50 வயது கிட்ட ஆக இருப்பதால் பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தார். சொத்து விவகாரத்தில் அப்பாவுடன் பிரச்சனை, கை கூடாத காதல், கை விட்ட கணவர், பல வருடங்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் தனிமை வாழ்கை என பல துயரங்களை சந்தித்து இருக்கிறார் கனகா.
கனகா வீட்டில் தீ விபத்து:
இதனிடையே இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் கனகா தனிமை வாழ்கையினை கடத்தி இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் கனகா வீட்டில் தீ பிடித்து இருந்தால் தீயணைப்பு வீரர்கள் அதை அணைத்து இருந்தார்கள். பின் கனகா மற்றும் அவரின் வீட்டின் நிலைமை குறித்தும் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. இதை பார்த்த பலருமே கனகாவிற்கு என்ன ஆனது? பல வருடங்களாக அவர் வீட்டை விட்டு வெளியே வராமல் தனிமையாக இருக்க காரணம் என்ன? ஏன் இப்படி இருக்கிறார்? என்று பல கேள்விகள் எழுந்தது.
கனகா குறித்த தகவல்:
இந்த நிலையில் நடிகை கனகாவின் தனிமைக்கு காரணமான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, கனகாவின் அம்மா தேவிகாவால் நடிகர் ஒருவர் சினிமாவில் வாய்ப்பை பெற்று இருக்கிறார். அவருடைய மகன் தான் ராமச்சந்திரன். இவர் கனகாவுக்கு பிஏவாக இருந்தார். கனகாவிற்கு படப்பிடிப்பு செல்வது, கதை கேட்பது, சம்பளம் வாங்குவது என அனைத்தையும் இவர் தான் செய்து கொண்டிருந்தார். பின் இராமச்சந்திரன் கனகாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.
கனகாவின் தனிமைக்கு காரணம்:
அவர் ஒருதலையாகவே கனகாவை காதலித்து வந்திருக்கிறார். ஆனால், ராமச்சந்திரனை தவறாக புரிந்து கொண்ட கனகா அவரை போலீசில் பிடித்து கொடுத்து விடுவேன் என்று கூறி வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார். பிறகு சில வருடங்கள் கழித்து ராமச்சந்திரன் இறந்த பிறகு தான் கனகாவுக்கு அவர் தன்னை காதலித்த உண்மை தெரிய வந்திருக்கிறது. இதனால் மணமுடைந்து போன கனகா சினிமாவும் வேண்டாம், எதுவும் வேண்டாம் என்று தன்னைத் தானே வீட்டில் சிறை வைத்துக்கொண்டு தனிமையில் வாழ்ந்து வருகிறார். இதை தற்போது திரைப்பட விமர்சகர் செய்யாறு பாலு பகிர்ந்திருக்கிறார்.