அம்பேத்கர் புகைப்படத்தால் படத்தில் இருந்து பெயரையே நீக்கி இருக்கும் படக்குழு – சர்ச்சையில் போத்தனூர் தபால் நிலையம் படக்குழு

0
656
Pothanur Thabal Nilayam
- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆஹா தமிழ் ஓடிடியில் உலகளாவிய வெளியீடாக “போத்தனூர் தபால் நிலையம்” திரைப்படம்  வெளியாகிறது. இப்படத்தை இயக்கியுள்ள பிரவீன் தான் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் கலை இயக்குனராக பணியாற்றிய சதீஷ்ஷின் நண்பர் அர்விந்த் தன் முகநூல் பக்கத்தில் இந்த படத்தில் சதிஷ்ஷின் பெயர் எந்த இடத்திலும் இடம்பெறவில்லை என்று தன் ஆதங்கத்தை தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் பதிவியுள்ளதவது ‘போத்தனூர் தபால் நிலையம் என்கிற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இதில் குறிப்பாக அப்படத்தில் வரும் தபால் நிலைய கலை வடிவமைப்பை படம் பார்த்த அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

-விளம்பரம்-

அதில் காட்டப்பட்டிருக்கும் சின்னச்சின்ன பொருட்களின் recreationனும் மிகுந்த சிரத்தை எடுத்து செய்திருக்கிறார்கள் என்ற பாராட்டுகளும் வந்தவண்ணம் உள்ளன. சோ…இக்கலைப்படைப்புகளை உருவாக்கியதற்கு கண்டிப்பாக ஒரு கலை இயக்குனர் தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது என்றே எண்ணுகிறேன்…ஆனால் இப்படத்தின் போஸ்டர்களிலும், இப்படத்தின் டைட்டில் கார்டுகளிலும் அந்த கலை இயக்குனரின் பெயரே எங்கும் குறிப்பிடப்படவில்லை…

இதையும் பாருங்க : கேன்டிலைட் டின்னர் மூலம் அமீர் காதலை மறைமுகமாக உறுதி செய்த பாவனி ? – வைரலாகும் புகைப்படம்

- Advertisement -

பொதுவாக ஒரு சினிமாவை ஆரம்பித்து முடிப்பதற்குள் உள்ளுக்குள்ளே ஏகப்பட்ட ஈகோ சார்ந்த பிரச்சனைகள் வரும் போகும்…அதனால் உழைத்த பலரின் பெயர்கள் சின்ன சின்ன தகராருகள் காரணமாக இருட்டிப்பு செய்து விடுவது வழக்கமே…ஆனால் இந்த போத்தனூர் தபால் நிலையத்தின் கலை இயக்குனர் பெயரை இந்த படத்தில் எங்கும் வராமல் பார்த்துக்கொண்டதற்கு காரணமே வேறு…சில வருடங்களுக்கு முன்னர் எனக்கு சதீஷிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது.

(சதிஷ் – போத்தனூர் தபால் நிலையத்தின் கலை இயக்குனர்)…மச்சி சொல்றா என்றேன்…எனக்கு ஒரு சந்தேகம்… தபால் நிலையங்களில் அம்பேத்கர் புகைப்படம் இருக்கனுமா இருக்கக்கூடாத என்றான்… இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை…ஆனால் இருந்தால் எந்த தப்பும் இல்லை… நாட்டின் சட்டத்தையே வடிவமைத்து கொடுத்தவரின் புகைப்படத்தை வைத்தல் அறம் சார்ந்து சரியே என்றேன்…சரி மச்சி என்று போனை வைத்துவிட்டான்…

-விளம்பரம்-
கலை இயக்குனர் சதீஷ்

பிறகு சில நாட்கள் கழித்து சதீஷ் சொன்னான்… நான் அந்த படத்துல இருந்து வெளியே வந்துவிட்டேன் என்று… ஏன் என்று கேட்டதற்கு … அவன் வைத்திருந்த அம்பேத்கர் புகைப்படத்தை குப்பைகள் போடப்பட்டிருக்கும் இடத்தில் போட்டுவைத்திருந்ததாகவும், அதை கேட்கப்போக சிக்கல் உருவெடுத்திருக்கிறது…என்றும் சொன்னான்…
இதைக்காரணம் காட்டி சதீசை படத்திலிருந்து ஓரம் கட்டியும் இருக்கிறார்கள்…பிறகு படத்தில் மீதம் இருக்கும் அந்த வங்கி காட்சிகளுக்கான செட்டை அப்படத்தின் இயக்குனரே போட்டு வேலை செய்திருக்கிறார் போலும்…

சதிஷ் சென்றபின் இயக்குனர் வடிவமைத்த செட்டில்… கதவின் இருப்பக்கமும் காந்தி புகைப்படமே மாட்டப்பட்டிருக்கும்…அவ்வாறு மாட்டி எந்த அரசு அலுவுலகங்களிலும் நான் கண்டதில்லை…
அம்பேத்கர் மீது இயக்குனருக்கு அவ்வளவு வன்மம் ஏன் என்று எனக்கு தெரியவில்லை…

சதீஷ் நண்பர் அரவிந்த்

என்னவாக இருந்தாலும் படத்தின் மய்யமே போஸ்ட் ஆபிஸ் தான் அதை விடிவமைத்த கலை இயக்குனரின் பெயரை மறைத்தது என்னளவில் துளியும் மனிதாபிமானமற்ற செயல்…

இதில் irony என்னவென்றால் இவர்கள் பெயர் போடாமல் இருட்டடிப்பு செய்தாலும், சதிஷ் தான் இதற்கு கலைஇயக்குனர் என்ற உண்மையை தெரிந்துக்கொண்டு பலர் அவனை அலைத்து பாராட்டியும் வருகின்றனர்…

உழைப்பு சுரண்டல், கார்பரேட் நிறுவனங்களுக்கு அடுத்து கலைத்துறையில் தான் அதிகம் என்று சொன்னால் அது மிகை அல்ல…

மச்சி உன்னோட வேலை சிறப்பு … காலம் கனிந்து வரும் உன் புகழ் பாட… என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement