சர்கார் டீசரை அடித்து நொறுக்கிய பிரபாஸ்.! இந்திய அளவிலும் புதிய சாதனை.!

0
675
Prabas
- Advertisement -

பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்திற்கு பின்னர் தெலுங்கு இந்திய அளவில் கவனனிக்கப்பட்டார். தற்போது ‘சாஹோ’ என்ற படத்தில் நடித்துள்ளார் பிரபாஸ். இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆன நிலையில் ஒரு வழியாக இந்த படத்தின் டீஸர் நேற்று வெளியாகி இருந்தது. தற்போது இந்திய அளவில் இந்த படத்தின் டீஸர் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

-விளம்பரம்-

பாகுபலி திரைப்படம் பிரபாஸுக்கு சர்வதேச அளவில் வெற்றிப் படமாய் அமைந்தது. இப்படத்தைத் தொடர்ந்து தற்போது `சாஹோ’ படத்தில் நடிப்பதை உறுதி செய்தார் நடிகர் பிரபாஸ், இதற்கு நடுவில் இவருக்கு நிச்சயதார்த்தம், கல்யாணம் என ஏகப்பட்ட வதந்திகள் வட்டமிட்டாலும் சத்தமே இல்லாமல் தனது முழு கவனத்தையும் சாஹோ மீது செலுத்தினார் பிரபாஸ்.

இதையும் பாருங்க : மத்தவங்களுக்கு வந்தா ரத்தம்.! உங்க கணவருக்கு வந்தா தக்காளி சட்னியா.! என்ன இதெல்லாம்.! 

- Advertisement -

பாகுபலி 1, 2 -ன் மாபெரும் வெற்றிக்கு பின்னர் பிரபாஸ் நடித்திருக்கும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை ஸ்ரத்தாக கபூர் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும், இந்த டீஸர் இதுவரை 12,620,033 பார்வையளர்கள் பார்த்துள்ளனர், மேலும், 143k நபர்கள் லைக்கும் செய்துள்ளனர். இந்த டீசருக்கு முன்பு வெளியான அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் தற்போது வரை 9,334,999 பார்வையாளர்கள் மட்டுமே பார்த்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் இந்திய அளவில் பல்வேறு சாதனைகளை. படைத்துள்ளது. 24 மணி நேர சாதனை என எடுத்துக்கொண்டால் விஜய் நடித்த சர்கார் படத்தின் டீசர் 16 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்ற டீசர் என்ற இடத்தில் பிடித்திருந்தது. அதனை சாஹோ டீசர் 60 மில்லியன் பார்வைகளை பெற்று சர்கார் டீசர் சாதனையை பின்னுக்கு தள்ளி உள்ளது.

Advertisement