பிரபல அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட பிரபாசின் சிலை விரைவில் அகற்றம் – இதான் காரணம்.

0
1000
- Advertisement -

மைசூரில் உள்ள மியுசியம் ஒன்றில் தெலுங்கு நடிகர் பிரபாஸின் உருவ சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். இவர் நடிப்பில் வந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அதிலும், 2015 ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படம் இந்திய அளவில் பிரபலமானது. தற்போது பான் இந்தியா படமாக பிரபாஸ் நடிப்பில் வெளியாகி உள்ள ஆதிபுருஷ் ராமாயணம் பற்றிய கதை.

-விளம்பரம்-

ராமாயணம் கதையை மையக்கமாக வைத்து பல படங்கள் எடுக்கப்பட்டாலும், இதுவரையில் எந்த படமும் தற்போது உள்ள நவீன தொழில் நுட்பத்தை தற்போது எடுக்கவில்லை. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதோடு பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பதினால் எதிர்பார்ப்பு இன்னமும் அதிகமானது. மேலும், இந்த ஆதிபுருஷ் திரைப்படமானது இராமாயணத்தில் வரும் யுத்த காண்டம் பற்றிய கதையாகும். ராமனாக பிரபாஸும் , சீதையாக கிருதி சனோனும், ராவணனாக சயீப் அலி கான் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை சந்தித்து இருக்கிறது. இந்நிலையில் நடிகர் பிரபாஸ் அடுத்து நடக்க உள்ள “புராஜெக்ட் கே” என்ற படமும் புராண கதையை சொல்லும் படமாக இருக்கும் என்று தெலுங்கு திரையுலக வட்டாரங்களில் கூறப்படுகிறது. கிடைத்துள்ள தகவல்களில் படி கடவுள் மகாவிஷ்ணுவின் கடைசி அவதாரமான கல்கி அவதாரத்தை வைத்து எடுக்கப்படும் கடைசி அவதாரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் என்றும் இதில் நடிகர் பிரபாஸ் விஷ்ணுவாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

சிலை குறித்து தகவல்:

மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி பாகுபலி புகழ் பிரபாஸின் உருவ சிலை ஒன்று அமைக்கப்பட்டு பார்வையாளர்களின் காட்சிக்காக சமீபத்தில் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது இது பார்வையாளர்களை வசீகரித்தாலும் பாகுபலி திரைப்படத்தின் தயாரிப்பாளர் சோபாபுக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. இது குறித்து அவர் கூறுகையில் இது முறைப்படி உரிமை பெற்ற சிலை அல்ல இது எங்களிடம் அனுமதி பெறாத அல்லது எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்து இந்த சிலையை செய்யவில்லை.

-விளம்பரம்-

இந்த சிலையை அகற்றுவது குறித்து நாங்கள் முறைப்படி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் இந்த சிலை அகற்றப்படும் என்று அவர் கூறினார் இது குறித்து மியூசியம் தரப்பில் கூறிய போது தயாரிப்பாளர் இருந்த சிலையை குறித்து அவரது வருத்தத்தை தெரிவித்துள்ளார் யாருடைய உணர்வு வருத்தப்படும் வகையில் இந்த இருக்காது எனவே இந்த சிலையை நாங்கள் விரைவில் அகற்ற உள்ளம் என்றும் அவர் கூறியிருந்தார்.

Advertisement