விஜய்யின் ஒரே படத்தில் இசையமைத்த மூன்று இசையமைப்பாளர்கள். எல்லா பாட்டும் ஹிட். எந்த படம் தெரியுமா ?

0
1089
Vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னொரு காலத்தில் பிரபல இயக்குனராக கொடி கட்டி பறந்தவர் இயக்குனர் பேரரசு. மேலும், இவர் ஆட்டம், பாட்டம், சண்டை, பாசம், நகைச்சுவை, ஆக்ஷன், அதிரடி வசனங்கள் என்று மசாலாவாக படங்களை தருவதில் வல்லவர். அதுமட்டும் இல்லாமல் இவருடைய பட பெயர்கள் எல்லாமே ஊர் பெயர்களை கொண்டிருக்கும். அதை வைத்தே எளிதாக இவரை கண்டுபித்து விடலாம். அதோடு தான் இயக்கும் படங்களில் ஏதாவது ஒரு காட்சியில் சிறு வேடங்களில் தோன்றி நடிப்பார். இவர் திருப்பாச்சி, சிவகாசி, தர்மபுரி, திருப்பதி, பழனி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல சூப்பர் டூப்பர் படங்களை இயக்கி உள்ளார்.

-விளம்பரம்-

தளபதி விஜய் வைத்து மட்டும் சிவகாசி, திருப்பாச்சி என்ற இரண்டு மாஸ் படங்களை இயக்கினார்.இந்த இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் பேரரசு அவர்கள் சினிமா உலகில் கடந்த 15 ஆண்டுகளாக உள்ளார். ஆனால், இவர் இதுவரை தமிழில் 9 படங்களை மட்டும் இயக்கி உள்ளார். மலையாளத்தில் இரண்டு படங்களை இயக்கி உள்ளார். இப்படி மாஸ் படங்களை கொடுத்து வந்த இயக்குனர் பேரரசின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சினைகள் ஏற்பட்டதால் இவர் சில காலமாக சினிமா துறையை விட்டு விலகி இருந்தார்.

இதையும் பாருங்க : இருக்குனு எழுதி போடுங்க நம்ம கண்ணு வேற தப்பாவே பாக்துது – பிரியா ஆனந்த் புகைப்படத்தை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.

- Advertisement -

பேரரசு இறுதியாக 2012 ஆம் ஆண்டு திருத்தணி படத்தை இயக்கி இருந்தார். அதன் பின்னர் தமிழில் எந்த படத்தையும் இயக்கவில்லை. பேரரசு தமிழில் இயக்கிய முதல் படமான திருப்பாச்சி திரைப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் ஹிட் தான். ஆனால், இந்த படத்தில் 3 இசையமைப்பாளர்கள் பணியாற்றினார்கள் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.

இந்த படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத், மணி ஷர்மா, தீனா என்று மூன்று இசையமைப்பாளர்கள் பணியாற்றினார்கள். இந்த படத்தில் இடம்பெற்ற கட்டு கட்டு கீர கட்டு பாடலுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார். அதே போல கண்ணும் கண்ணும் தான் பாடலுக்கு மணி சர்மா இசையமைத்து இருந்தார். மற்ற அணைத்து பாடல்களையும் தீனா இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement