பேகி pant குறித்து கேட்டுள்ள சூப்பர் ஸ்டார், தாடியின் ரகசியம் – பிரபுதேவா பிறந்தநாள் ஸ்பெஷல்.

0
1487
prabhudeva
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரபு தேவா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் நடன அமைப்பாளர், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர். இவர் பிரபலமான நடன ஆசிரியர் சுந்தரத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபு தேவாவின் நடன திறமைக்காக இவரை இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்றும் அழைக்கிறார்கள். இவர் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடனம் ஆடி உள்ளார். தற்போது இவருடைய நடிப்பில் 4 படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன. இந்நிலையில் இன்று நடிகர் பிரபு தேவா அவர்களின் பிறந்த நாள். அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு அவரைப் பற்றி சில விஷயங்களை இங்கு பார்ப்போம்….

-விளம்பரம்-
Rare-pic - Suryan FM

- Advertisement -

மைசூரில் திறந்து மயிலாப்பூரில் வளர்ந்த சிறுவன் தான் தற்போது இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் ஆக உருமாறி இருக்கிறார். இந்தியாவைப் பொறுத்தவரை சாதனை படைத்த பெரும்பாலானோர் வாழ்க்கையை ஏட்டுக்கல்வி ஒன்றும் அவர்களை ஏற்றி விட வில்லை. அவர்களுடைய திறமையும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் தான் அவர்களை உயர்த்தியுள்ளது. ஒருமுறை பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் இவர் பள்ளி சார்பாக நடனமாடியிருக்கிறார்.

அதில் இவருக்கு 8 ஆவது இடமும் கிடைத்தது. அதில் கலந்து கொண்டதே மொத்தம் எட்டுபேர் தானம். அங்கு என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று தன் பள்ளி நண்பர்களிடம் சொல்லி புலம்பிய அந்த பிரபுதேவா தான் தற்போது நடனத்திற்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். நடிகர் பிரபு தேவா அவர்கள் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என பல படங்களில் தோன்றியிருந்தாலும் இவர் ஹீரோவாக நடித்த முதல் படம் இந்து.

-விளம்பரம்-
Chiru

முதல் படத்திலேயே இவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து காதலன், விஐபி, மிஸ்டர் ரோமியோ, மின்சாரகனவு என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். படங்களில் இவருடைய ஹீரோயிசத்தை விட இவருடைய நடனம் தான் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது. இவர் தமிழில் பிஸியாக இருந்தாலும் சோலோவாக பிறமொழி சூப்பர் ஸ்டார்களின் படங்களிலும் நடித்துள்ளார்.

தெலுங்கு, இந்தியில் என பல மொழிகளில் இயக்குனராக பணியாற்றியுள்ளார். சில காலம் இவர் இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தாலும் தேவி படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் மீண்டும் இடம் பிடித்தார். பிரபுதேவா ஹைதராபாத்திற்கு போனால் போதும் சிரஞ்சீவி வீட்டிலிருந்து அவருக்கு மிகவும் பிடித்த தோசை வருமாம். இவருக்கு ஸ்வீட் என்றால் அத்தனை பிரியமாம். ‘பலூன் பேகி’ ரக பேன்ட்டை அறிமுகப்படுத்தி டிரெண்டாக்கியது பிரபுதேவா தான்.

இந்தப் பேண்ட் நல்லாயிருக்கு எங்க வாங்கனா என்று ஒருமுறை ரஜினி தன்னிடம் கேட்டதாக இவரே பேட்டியில் கூறியிருந்தார். இவருக்கு நடனத்தை தவிர கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டிலும் அதிக ஆர்வம் உடையவர். பிரபு தேவாவின் பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ். ஷூட்டிங் இல்லாத சமயத்தில் இவர்களுடன் நேரம் செலவழிப்பதுதான் இவரின் ஹாபி. தான் படித்த பள்ளியின் விழாவில் தவறாமல் கலந்துகொள்வாராம். பிரபுதேவா ரெண்டு கேரட்டரில் நடித்த போது கூட தாடி வைத்து இருப்பார். எப்போதும் தாடி வைத்திருப்பதற்கான இரண்டு காரணங்களை இவர் சமீபத்தில் கூறியிருந்தார்.

Prabhu Deva Wiki, Age, Girlfriend, Wife, Family, Biography & More ...

அது மிகக் குறைவான வயதிலேயே மாஸ்டரானதால் தன்னை வயது முதிர்ச்சியோடு காட்டிக்கொள்வதற்காகவும், எப்போதும் க்ளின் ஷேவ் செய்யாமல் தாடியுடன் இருக்கும் தனது அப்பாவை இன்ஸ்பிரேஷனாக கொண்டதானால் தாடி வைத்து இருப்பதாகவும் கூறினார். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைப்படும் இவர் தனது பள்ளி கலை நிகழ்ச்சியில் ஒன்றில்கூட கலந்துகொண்டதில்லை என்பதுதான் ஆச்சர்யம். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என அவருக்கு பல முகங்கள் இருந்தாலும் `பிரபுதேவா மாஸ்டர்’ என்பது தான் அவரின் அடையாளம். நடன புயலுக்கு எங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Advertisement