பிரபுதேவாவின் வீட்டை பார்த்துளீர்களா ? அடேங்கப்பா இவ்ளோ ப்ரம்மாண்டமா ? நீங்களே பாருங்க.

0
491
prabhu
- Advertisement -

மிக பிரம்மாண்டமாக இருக்கும் நடிகர் பிரபுதேவா வீட்டின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் பிரபுதேவா. அதோடு இவர் பல ஆண்டு காலமாக தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டு இருக்கிறார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் நடன அமைப்பாளரும் ஆவார். மேலும், இவருடைய தனித்துவமான நடனத்திற்கு இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று பலரும் இவரை அழைக்கப்படுகிறார்கள்.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. ஆனால், சில ஆண்டுகளாகவே பிரபு தேவா நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. சமீபத்தில் தான் பிரபுதேவா நடித்த மை டியர் பூதம் படம் வெளியாகி இருந்தது. இந்த படம் அதிகமாக குழந்தைகளை கவர்ந்திருக்கிறது. அதேபோல் இவரின் பொய்க்கால் குதிரை படமும் வெளியாகி இருந்தது.

- Advertisement -

பிரபுதேவா குடும்ப வாழ்க்கை:

இதனைத் தொடர்ந்து பிரபு தேவா அவர்கள் பகிரா, வினோதன், முசாசி, எங் மங் சங் போன்ற பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இதனிடையே பிரபுதேவா அவர்கள் 1995 இல் ராம்லதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஷால், ரிஷி ராகவேந்திர தேவா , ஆதித் தேவா என்று மூன்று மகன்கள் பிறந்தனர். இதில் பிரபுதேவாவின் மூத்த மகனான விஷால் தனது 12 வயதில் 2008 இல் காலமானார்.

பிரபு தேவாவின் காதல் சர்ச்சை:

அதன் பின்னர் பிரபுதேவாவுக்கு நடிகை நயன்தாராவின் மீது காதல் மலர்ந்தது. இது பலருக்கும் தெரிந்த ஒன்று. இதனால் பிரபுதேவா தனது மனைவியை விவாகரத்து செய்தார். அதன் பின்னர் நயன்- பிரபு தேவா காதல் திருமணம் வரை சென்று நின்று விட்டது. பின் பல காரணங்களால் இவர்கள் காதல் முறிந்து விட்டது. பிறகு பிரபு தேவா தனியாக தான் வாழ்ந்து வந்தார். அதோடு சில காலம் பிரபு தேவா சினிமாவில் இருந்தும் பிரேக் எடுத்து கொண்டார்.

-விளம்பரம்-

பிரபு தேவாவின் இரண்டாவது திருமணம்:

சமீப காலமாக தான் பிரபு தேவா மீண்டும் தன் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், சில ஆண்டுகளுக்கு முன் பிரபு தேவா தனது உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அவர் ஒரு மருத்துவர் ஆவார். சமீபத்தில் தான் இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் வெளியாகியிருந்தது. அது மட்டும் இல்லாமல் இவர் திருமணம் செய்து கொண்ட நபரின் புகைப்படங்களும் சமூகத்தில் வைரலாக இருந்தது.

பிரபுதேவா வீட்டின் புகைப்படம்:

இந்த நிலையில் பிரபு தேவா வீட்டின் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. அதாவது, தற்போது பிரபுதேவா வாழ்ந்து வரும் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படம் தான் வெளியாகியிருக்கிறது. அதில் பார்ப்பதற்கே மிக அழகாய் இருக்கிறது. வீட்டில் ஒவ்வொரு அறையும் மிக அழகாக பிரபுதேவா கட்டியிருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாயை பிளந்து லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

Advertisement