மசூதியை தோண்டினால் கோவில்கள் தெரியும் என்றால் கோவில்களை தோண்டினால் இதான் தெரியும் – பிரகாஷ் ராஜ் சர்ச்சை கருத்து

0
174
- Advertisement -

பல ஆண்டுகால போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அயோத்தி ராமர் கோவில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதன் பிறகு பிரம்மாண்டமாக ராமர் கோவிலை கட்ட பிரதமர் மோடி திட்டமிட்டு இருந்தார். அதன் படி பிரம்மாண்டமாக 1800 கோடி ரூபாய் செலவில் ராமர் கோயில் கட்டப்பட்டிருக்கிறது.கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாப்பிக்கே அயோத்தி ராமர் கோயில் குறித்த செய்தி தான்.

-விளம்பரம்-

இந்தக் கோவில் நாட்டின் பாரம்பரியம் மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கிறது. ஸ்ரீராம் உள்நாட்டு தீர்த்தத்தின்படி இராமர் கோயில் மூன்று அடுக்குகளை கொண்ட தளம். ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. மொத்தம் 392 தூண்களையும், 44 கதவுகளையும் கோயில் கொண்டுள்ளது. இப்படி புகழ்பெற்ற அயோத்தி ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.

- Advertisement -

ஆயிரக்கணக்கான பக்தர்களின் கனவு நினைவாகி இருக்கிறது. இந்தியா நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான முழுவதும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு முழுவதும் காண வருகைதந்தனர். மேலும், இந்த நிகழ்வு பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் அரசியல் தலைவர்கள், இந்திய சினிமாவின் பிரபல பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

ராமர் கோவில் இருந்த இடத்தில் ஏற்கனவே மசூதி இருந்த நிலையில் அதற்கு முன்பாகவே அங்கு இந்து கோவில் இருந்ததாகவும் அதை இடித்தே பாபர் மசூதி கட்டப்பட்டதாகவும் தீர்ப்பு வெளியானது. இப்படி ஒரு நிலையில் இந்தியாவில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரகாஷ் ராஜ் ‘ மசூதியை தோண்டினால் கோவில்கள் தெரியும் என்றால் கோவில்களை தோண்டினால் புத்தர் சிலைகள் தெரியும்’ என்று பேசி இருக்கிறார்.

-விளம்பரம்-

ஏற்கனவே ராமர் கோவில் குறித்து பேசிய பிரகாஷ் ராஜ் ‘ நீ ராமர் பக்தனாக இரு எனக்கு பிரச்சனை இல்லை. இயேசு பக்தனாக இருபிரச்சனை இல்லை. அல்லா பக்தனாக கூட இரு. இவர்களால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், குருட்டு பக்தனாக இருக்காதே. இவர்களால்தான் ஆபத்து என்று பேசியிருக்கிறார். சில ஆண்டுகளாகவே பிரகாஷ்ராஜ் அவர்கள் பிரதமர் மோடியையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து பதிவுகளை போட்டு வருகிறார்.

இவருடைய பதிவுகள் எல்லாம் எதிர்க்கட்சி செய்யும் அளவிற்கு இருக்கிறது.இதனால் பாஜக சார்பாக மிரட்டல்கள் எல்லாம் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் பிரகாஷ்ராஜ் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

Advertisement