‘ஆணாதிக்க கொள்கையுடன் இணைந்து வாழ தொடங்கி விட்டார் ‘கணவருக்கு செய்த பூஜையை கேலி செய்த நெட்டிசன்கள் – பிரணிதா கொடுத்த பதிலடி.

0
156
pranitha
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் பிரணிதா சுபாஷ். 2011ஆம் ஆண்டு நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். அதன் பின்னர் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘சகுனி’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானார் மேலும், சூர்யா நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான மாஸ் படத்தில் அப்பா சூர்யா கதாபாத்திரத்திற்கு மனைவியாக பிரனீதா சுபாஷ் நடித்து இருந்தார். இவருக்கு அழகான தோற்றம் இருந்த போதும் கார்த்தி மற்றும் சூர்யாவை தவிர வேறு எந்த முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக இவர் அதர்வா நடிப்பில் வெளியான ‘ஜெமினிகணேசனும் சூரிளிராஜனும்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-
Pranitha

நடிகை பிரணிதா அவர்கள் சமீபத்தில் கொரோனா வைரஸ் குறித்து சொன்ன கருத்து ஒன்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் கூறியது, இந்து மதத்தை பார்த்து சிரித்தார்கள். ஆனால், இன்று சிந்திக்கிறார்கள். கைகூப்பி கும்பிட்டு மற்றவர்களுக்கு வணக்கம் சொல்வார்கள். அதைத் தான் இப்போது செய்கின்றோம். சைவ உணவு சாப்பிடுவதையும், யோகா செய்வதையம், இறந்தவர்களை எரித்தவர்களையும் பார்த்து சிரித்தார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : எப்படி இருக்கிறது அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’ – முழு விமர்சனம் இதோ.

இந்து மதம் குறித்து பேசி சர்சைக்கு உள்ளான பிரணிதா :-

இப்படி இந்து மதக் கலாச்சாரங்களை பார்த்து சிரித்தார்கள். ஆனால், உலகமே என்று இதைத் தான் செய்து வருகின்றது. முன்னால் சிரித்தவர்கள் எல்லாம் தற்போது சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த பழக்கம் தான் தற்போது கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கிறது என பிரணிதா கூறியுள்ளார். இப்படி இவர் சொன்ன கருத்துத்தை ஒரு சில பேர் பாராட்டியும், சிலர் சர்ச்சையாக பேசினார்கள்.

-விளம்பரம்-

திடீர் திருமணம் செய்து கொண்ட பிரணிதா :-

நடிகை பிரணிதா திடீர் திருமணம் செய்து கொண்டது இவரது ரசிகர்களுக்கு பெரும் ஷாக்கை ஏற்படுத்தியது. இவர் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் நிதின் ராஜுவை கடந்த ஆண்டு மே 31 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்தார்கள். பின் இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களுடைய திருமணம் எளிமையாக நடந்தது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக இவர்களுடைய திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இதனை அடுத்து தன்னுடைய திருமணத்தை உறுதி செய்ததை பிரனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில் அவர் தன்னுடைய திருமண புகைபடங்கள், தன் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் என எல்லாத்தையும் தன் ரசிகர்களுக்காக பதிவிட்டு கொரோனா சூழ்நிலை காரணமாக அனைவரையும் அழைக்க முடியவில்லை என்றும் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த பலரும் பிரனிதாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தார்கள்.

கனவரின் பிறந்தநாளில் கர்பமான பிரணிதா :-

இப்படி ஒரு நிலையில் கடந்த வருடம் முன்னர் தன் கணவரின் பிறந்தநாளில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார் பிரணிதா. அந்த பதிவில் ‘என் கணவரின் 34வது பிறந்த நாளில் கடவுள் எங்களுக்கு தந்த வரம்’ என்று உருக்கமாக பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் பிரணிதாவிற்கு வளைகாப்பு நடைபெற்று இருக்கிறது. அந்த புகைப்படங்களை பிரணிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதன் பின்பு சமீபத்தில் ஒரு ஆழகான பெண் குழந்தையை பெற்றடுத்தார்பிரணிதா.

கனவரின் காலுக்கு பாதாபிஷேகம் :-

ஆடி அமாவாசை தினம் அன்று நடிகை பிரணிதா தனது கணவர் ராஜுவின் பாதங்களுக்கு பாதாபிஷேகம் செய்தது போன்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். வெளியிட்ட சிலமணி நேரங்களில் வைரலான அந்த புகைப்படத்தை பார்த்த சில பேர் திரைப்படங்களில் கவர்ச்சியாக, மார்டனாக வலம் வரும் பிரணிதா ஆணாதிக்க கொள்கையுடன் இணைந்து வாழ தொடங்கி விட்டார் போல என கிண்டலும் கேலியிமாக பேசினார்கள். அதற்கு பதிலடி தரும் வகையில் நடிகை பிரணிதா நான் திரைப்படங்களில் மார்டனாக கவர்ச்சியாக நடிக்கிறேன் என்பதற்காக சிறுவயதில் இருந்தே பார்த்து பார்த்து வளர்ந்த பாரம்பரிய சடங்குகளை கடைபிடிக்காமல் என்னால் இருக்க முடியாது. நான் நீங்கள் அனைவரும் அறிந்த மாடர்ன் பெண்ணாகவே இருந்தாலும் மனதளவில் ஒரு குடும்ப பாங்கான பாரம்பரிய வழிமுறைகளை கடைபிடிக்கும் ஒரு பெண்தான் என்று அவர் கூறியிருந்தார்.

Advertisement