விஜய் படத்துல கமிட் ஆகி இருக்கீங்களே, பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு பிரசாந்த் கொடுத்த Thug life பதில்.

0
861
- Advertisement -

தற்போது சோசியல் மீடியா முழுவதும் பிரசாந்த் செய்திருக்கும் நல திட்ட உதவி குறித்து தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி பகுதிகளில் கடந்த 17ஆம் தேதி முதல் கனமழை பெய்திருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவஸ்தை பட்டு இருக்கிறார்கள். இதற்கு சமீபத்தில் தான் விஜய் அவர்கள் தூத்துக்குடி மக்களை நேரில் சந்தித்து நல உதவிகளை செய்திருந்தார். பின் நடிகர் பிரசாந்த்தும் தூத்துக்குடி ஏ ஆர் எஸ் மஹாலில் வைத்து நல திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்.

-விளம்பரம்-

இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அரிசி, உடைகள் போன்ற நல திட்டங்கள் வழங்கி இருக்கிறார். இதை அடுத்து நடிகர் பிரசாந்த் செய்தியாளர்களை சந்தித்து, பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து உதவி செய்வதன் மூலம் மகிழ்ச்சி அளிக்கிறது. கடவுள் அந்த பாக்கியத்தை எனக்கு கொடுத்து இருக்கிறார். இதுபோன்று எல்லோருமே உதவி செய்வார்கள். இந்த மழை வெள்ளத்தில் தமிழக அரசு மற்றும் காவல்துறையினர் உட்பட பல அதிகாரிகள் தங்களுடைய குடும்பங்களை எல்லாம் விட்டு சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். நம்முடைய நாடு மிகப் பெரிய நாடு.

- Advertisement -

நடிகர் பிரசாந்த் அளித்த பேட்டி:

இதனால் அடுத்த பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக குளங்களை தூர்வார வேண்டும். ஒவ்வொரு பேரிடர் காலத்தில் நாம் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம். இனிமேல் இது போல் நடக்காமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார். உடனே பத்திரிகையாளர் ஒருவர், விஜய் சார் படத்தில் நீங்கள் கமிட் ஆகி இருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு, நானும் விஜய் சாரும் சேர்ந்து படத்தில் நடிக்கிறோம் என்று மாசான பதிலை பிரசாந்த் கொடுத்திருக்கிறார்.

பிரசாந்த் கொடுத்த பதிலடி:

அது விஜய் சார் படம் இல்ல. நானும் அவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறோம் என்பதை தான் பிரசாந்த் கூறியிருக்கிறார். காரணம், ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக இருந்தவர் பிரசாந்த். இவர் ஆண் அழகன் என்ற பட்டத்தைப் பெற்றவர். இவர் பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமான தியாகராஜனின் மகன் ஆவார். நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் வணிக ரீதியாக வெற்றியை பெற்று இருந்தது. மேலும், இவர் 90 காலகட்டத்தில் விஜய், அஜித்தை விட ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட மவுஸ் கொண்டு இருந்தவர்.

-விளம்பரம்-

பிரசாந்த் திரைப்பயணம்:

கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்து வெற்றிப்படம் என்று பார்த்தால் அது வின்னர் தான். அதற்குப் பிறகு இவருடைய நடிப்பில் வந்த பல படங்கள் தோல்வி அடைந்து இருக்கிறது. பின் இவருடைய மார்க்கெட்டும் சினிமாவில் குறைய தொடங்கியது. இதனால் பிரசாந்த் இடம் தெரியாமல் மறைந்து போனார். இடையில் அப்பப்போ தெலுங்கு சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்து இருந்தார். தற்போது இவர் அந்தகன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை தனி ஒருவன் படத்தை இயக்கிய மோகன் ராஜா தான் இயக்கி இருக்கிறார். தற்போது அந்த படத்திற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது.

விஜய்- பிரசாந்த் நடிக்கும் படம்:

அது மட்டும் இல்லாமல் விஜய் மற்றும் பிரசாந்த் இருவரும் இணைந்து கோட் the greatest of all time என்ற படத்தில் நடித்து வருகின்றனர். தற்போது விஜய் அவர்கள் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சினேகா, பிரசன்னா, பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, லைலா உட்பட பல நடிகர்கள் நடித்த நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. இந்த படத்திற்கு கோட்(GOAT) என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

Advertisement