மெர்சல் படம் சொன்ன தேதியில் வெளியாவதற்கு இவர்தான் காரணமாம் ! ஏ.ஆர். ரகுமான் தகவல்

0
1513
mersal
- Advertisement -

வழக்கமான விஜய் படங்களைப் போலவே தீபாவளிக்கு வெளிவந்த மெர்சல் படத்திற்கும் வந்த பிரச்சனைகள் எக்கச்சக்கம். இருந்தும் கடைசி நேரத்தில் பிரச்சனைகளை முடித்து திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது மெர்சல்.
mersalஇருந்தும் வெளியான பின்பும் மெர்சலை பிரச்சனைகள் விடவில்லை. குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்கக் கூறி ஒரு குறிப்பிட்ட கட்சியின் தமிழக பிரதிநிதிகள் பிரச்சனை செய்து ஓய, அது படத்திற்கு தேசிய அளவில் ப்ரோமோசனை எடுத்துக் கொடுத்தது.

அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து தற்போது 50ஆவது நாளை நோக்கி படம் அடியெடுத்து வைத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் படத்தின் இசையமைப்பாளர் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரஹ்மான் படம் கடைசி நேரத்தில் சரியாக வெளிவர யார் உதவியது எனக் கூறியுள்ளார்,
cbfc prasoon joshiஇதையும் படிங்க: நீங்கள் பார்க்காத விஜய் புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர்- புகைப்படம் உள்ளே !

அவர் கூறியதாவது:

- Advertisement -

‘படம் சரியான தேதியில் , ரிலீஸ் தேதிக்கு ஒருநாள் முன்னர் தணிக்கை சான்றிதலைப் பெற உதவியது, மத்திய தணிக்கை வாரிய அதிகாரி பிரசூன் ஜோசி தான் காரணம் எனக் கூறியுள்ளார். அவருடைய உதவி இல்லாமல் ஒரு நாளிற்கு முன்னாள் தனிக்கை சான்றிதல் பெற்று ரிலீஸ் செய்திருக்க முடியாது எனக் கூறி அவருக்கு நன்றி தெரிவித்தார் ரஹ்மான்

Advertisement