4 மணிக்கு மூச்சு விட சிரமப்பட்டு கண்ணு ரெண்டும் மேல போய், அதன் பிறகு – கேப்டனின் இறுதி நொடிகள் குறித்து முதன் முறையாக சொன்ன பிரேமலதா.

0
143
- Advertisement -

விஜயகாந்தின் இறுதி நிமிடங்கள் குறித்து பிரேமலதா பகிர்ந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜயகாந்தின் இறப்பு செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. விஜயகாந்த் மறைவு அவரின் குடும்பத்தை மட்டும் இல்லாமல் தமிழக மக்களையும் அதிகம் பாதித்து இருக்கிறது. விஜயகாந்த் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள் .

-விளம்பரம்-

பின் விஜயகாந்தின் உடலுக்கு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனை அடுத்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த நடிகர் விஜயகாந்த்திற்கு நினைவேந்தல் கூட்டம் ஒன்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டு விஜயகாந்த் குறித்து பல விஷயங்கள் பகிரப்பட்டது. இந்த நிலையில் விஜயகாந்தின் திருவுருவ படம் திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

- Advertisement -

விஜயகாந்தின் நினைவேந்தல் நிகழ்ச்சி:

இதில் பிரேமலதா மற்றும் கட்சித் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது நிகழ்ச்சியில் பிரேமலதா தன்னுடைய கணவர் விஜயகாந்தின் இறுதி நாட்கள் குறித்து கூறியிருந்தது, டிசம்பர் 25ஆம் தேதி வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் நாங்கள் கேப்டனை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றிருந்தோம். அன்று கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் அடுத்த நாள் அவரை அழைத்து அழைத்து வர சொன்னார்கள். அதோடு எனக்கு எட்டாம் நம்பர் என்றாலே பயம். எனக்கு கொஞ்சம் சென்டிமென்ட் அதிகம். 26 கூட்டினால் எட்டு வரும்.

பிரேமலதா சொன்னது:

இதனால் கேப்டனை 26ஆம் தேதி அழைத்து செல்ல நான் ரொம்பவே தயங்கினேன். ஆனால், அப்படியெல்லாம் இல்லை என்று என்னை வற்புறுத்தி அதே தேதிக்கு மருத்துவர்கள் அழைத்து வர சொன்னார்கள். 2014 ஆம் ஆண்டில் இருந்தே விஜயகாந்த்துக்கு உலகம் முழுவதும் உள்ள பல மருத்துவமனையில் சிகிச்சை அளித்திருக்கிறேன். அந்த நம்பிக்கையில் 26 ஆம் தேதி மருத்துவமனையிலும் அனுமதித்தேன். வழக்கமான பரிசோதனைக்கு பிறகு கொரோனா சோதனையும் நடந்தது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க சொன்னார்கள்.

-விளம்பரம்-

விஜயகாந்த் இறுதி நிமிடங்கள்:

இதனால் நாட்கள் மருத்துவமனையில் தங்கினோம். அந்த சமயங்களில் கேப்டன் நன்றாக தான் இருந்தார். 28ஆம் தேதி அதிகாலையில் 4 மணிக்கு அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே நான் அவரின் கையை பிடித்து, உங்களுக்கு எதுவும் ஆகாது. நிச்சயம் வீட்டுக்கு போய்விடும், தைரியமாக இருங்கள் என்று சொன்னேன். நான் சொல்வதை கேட்டாலும் அவர் மூச்சு விட ரொம்பவே சிரமப்பட்டார். அப்போது மருத்துவர்கள் இந்த முறை ரொம்ப சிரமம், உறவினர்களுக்கு சொல்லுங்கள் என்று கை விரித்து விட்டார்கள். பின் அடுத்த இரண்டு மணி நேரத்தில் விஜயகாந்த் உடைய உயிர் பிரிந்து விட்டது. இதுதான் அன்று நடந்தது.

பிரேமலதா சொன்ன வாக்குறுதி:

விஜயகாந்த் இறந்த பிறகு இன்று தான் கட்சியினரை சந்திப்பதால் இதை உங்களிடம் தெரிவிக்கிறேன். இந்த பிரஸ்பஞ்சம் இருக்கும் வரை விஜயகாந்தின் கோவிலாக அவரது நினைவிடம் இருக்கும். அதேபோல் இங்கு அளிக்கப்படும் அன்னதானம் இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை இதே இடத்தில் தொடரும். வள்ளல் விஜயகாந்த் நினைவு அன்னதானம் டிரஸ்ட் என்று விஜயகாந்த் மறைந்த அன்றே ஆரம்பித்து விட்டேன். இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் விஜயகாந்துக்கு மனைவியாக வாழ ஆசைப்படுகிறேன். சூழ்ச்சிகளில் விஜயகாந்த் மாட்டியதால் தான் தேமுதிகவின் பாதை எப்படியோ சென்று விட்டது. தொண்டர்களை வாழ வைத்து அழகு பார்க்கும் அன்னையாக தான் இனி என்னுடைய வாழ்க்கை இருக்கும். இனி மக்களுக்காக தான் என்னுடைய வாழ்க்கை என்று கூறி இருக்கிறார்.

Advertisement