உலக கோப்பை சதுரங்க போட்டியில் இரண்டாமிடம் பிடித்த பிரக்ஞான்ந்தாவை சந்தித்த இந்திய பிரதமர் மோடி. தற்போது அஜர்பைஜானில் நடைபெற்று வந்த FIDE உலக சதுரங்க போட்டியானது உலக செஸ் போட்டிகளில் அனைவரது கண்களையும் தமிழ் நாட்டின் பக்கம் திருப்ப வைத்தவர் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. அஜர்பைஜானில் தற்போது நடைபெற்று வந்த உலக செஸ் தொடரில் இறுதிப்போட்டியில் கிரான்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சனிடம் தோல்வியை தழுவி இரண்டாம் இடம் பிடித்தார்.
அவர் இதற்க்கு முன்னதாக உலக தரவரிசை பட்டியலில் 3ஆம் இடத்தில் இருந்த அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஃபேபியானோ கருவானா-வை அரையிறுதியில் வீழ்த்தி மேக்னஸ் கார்ல்சனை இறுதிச் சுற்றில் மோதினர் அந்த சுற்று ட்ராவில் முடிந்தது. இறுதிபோட்டியின் முதல் சுற்று நிலையில் அப்போட்டியனது 35 நகர்வுக்கு பின் இருவரும் ஒப்புக்கொண்டு சமன் செய்தார்.
முதல் சுற்று சமனில் முடிந்ததால் 22 அன்று நடைபெற்ற 2 ஆம் சுற்றும் டிராவில் முடிந்ததால் 23அன்று டைபிரேக்கர் சுற்று நடைபெற்றது. பிரக்னந்தா வெற்றி பெற வேண்டும் இந்திய முழுவதும் ஆவலுடன் இருந்து வருகின்றனர். 2022 பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற இணையதளப் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார். இதன் மூலம் கார்ல்சனை வீழ்த்திய 3-வது இந்திய வீரராக மாறினார் பிரக்ஞானந்தா. 21 அன்று போட்டியில் வெள்ளை நிற காய்களை கொண்டு களமிறங்கிய பிரக்ஞானந்தா, 21 அன்று போட்டியில் சற்று முன்னிலையில் இருந்து வந்தார்.
35 வது நகர்வுக்கு பின் போட்டி கடினமாக்க விரும்பாத இருவரும் ஒப்புக்கொண்டு சமன் செய்தனர். அதன் படி இன்று நடைபெற்ற டைபிரேக்கர் போட்டியானது இரண்டு சுற்றுகளாக நடைபெற்றது. இதில் முதல் சுற்றில் பிரக்ஞானந்தா கார்ல்சன் தோல்வியை தழுவினர். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே பிரக்ஞானந்தா கால்சென்னுக்கு சவால் கொடுத்தார். இருந்தும் போராடிய அவரால் முதல் சுற்றில் வெற்றி பெற முடியவில்லை. 2-வது சுற்றிலும் கார்ல்சன் வெற்றி பெற, உலகக் கோப்பை செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இந்த போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற இளம் வீரருக்கு தமிழகத்தில் பிரமாண்ட வரவேற்ப்பு அளிக்கப் பட்டது. அதன் பின் தமிழக முதல்வரை சந்தித்த பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்து தெரிவித்த பின்னர் அவருக்கு 30லட்சம் ரூபாய்க்காக காசோலை அவருக்கு வழங்கப் பட்டது. பிரக்ஞானந்தாவிற்கு ஆனந்த் மகேந்திர எலட்ரிக் காரை பரிசளிக்க இருப்பதாக ஆனந்த் மகேந்திர தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவையும், அவரது பெற்றோரையும் பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்திற்கு அழைத்து நேரில் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து பிரக்ஞானந்தா தனது எக்ஸ் தளத்தில் பதிவில், “பிரதமரை சந்தித்தது மிகவும் பெருமைக்குரிய தருணம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.