என் பையனும் அப்படி பொறந்துட்டான், மூட்டா தூக்கி பொழைக்க பாத்தா அதுக்கும் குடுப்பன இல்ல, அதான் இந்த தொழில் செஞ்சிட்டு இருக்கேன் – பேரழகன் சினேகா

0
1482
Peralagan
- Advertisement -

குடும்ப கஷ்டத்துக்காக தான் எல்லா கிண்டலையும் ஏற்றுக்கொண்டு படத்தில் நடித்தேன் என்று பேரழகன் சினேகா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் சசி சங்கர் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த படம் பேரழகன். இந்த படத்தில் சூர்யா, ஜோதிகா, விவேக், மனோரமா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்தில் சூர்யா மாறுபட்ட இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருந்தது. மேலும், இந்த படத்தில் உயரம் கம்மியாக சினேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் கற்பகம். சூர்யாவிற்கு பார்க்க சென்ற பெண் தான் சினேகா என்கிற கற்பகம். இவர் சில படங்களில் மட்டும் நடித்து சினிமாவில் இருந்து விலகி விட்டார். பின் இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக வியாசர்பாடி மார்க்கெட்டில் காய்கறிகள், மளிகை பொருட்கள், ஜவுளி வியாபாரம் என்று சீசனுக்கு ஏற்ப தொழிலை செய்து வருகிறார்.

- Advertisement -

பேரழகன் சினேகா அளித்த பேட்டி:

இந்நிலையில் சமீபத்தில் இவரை பிரபல பத்திரிகை பேட்டி எடுத்து இருந்தது. அதில் அவர் தன்னுடைய வாழ்கை பயணம் குறித்து கூறி இருந்தது, என்னுடைய குடும்பத்தில் நான் மட்டும்தான் உயரம் குறைவு. என்னை மாதிரியே என்னுடைய வீட்டுக்காரர் ராஜாவும் குள்ளமானவர்தான். அதனால்தான் இரண்டு வீட்டிலையுமே எங்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். என்னுடைய விருப்பத்திற்கு எதிராக எங்கள் வீட்டில் எனக்கு கல்யாணம் பண்ணி வைத்ததால் என் கணவரிடம் நான் சரியாக பேசாமல் தான் இருந்தேன். ஆரம்பத்தில் நான் அவரிடம் முகம் கொடுத்து கூட பேசவில்லை.

குடும்பம் குறித்து சொன்னது:

பிறந்த என் அம்மா வீட்டிற்கு சென்று விடலாம் என்றெல்லாம் நினைத்தேன். பின் என் கணவருடன் நல்ல மனதை புரிந்து கொண்டேன். நானும் என்னுடைய வீட்டுக்காரரும் குள்ளமாக இருந்ததால் எங்களுக்கு பிறக்கிற குழந்தையும் குள்ளமாக வளர வாய்ப்பு இருக்கு என்று சொன்னார்கள். கடவுள் விட்ட வழி எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம் என்று நாங்கள் தைரியமாக இருந்தோம். முதல் பிரசவத்தில் பெண் ஆரோக்கியமாக பிறந்தாள். பொண்ணு சராசரி உயரத்தோடு தான் வளர்ந்தாள். அடுத்த பிறக்கிற குழந்தையும் இதே மாதிரி இருக்கணும் என்று சொல்ல முடியாது.

-விளம்பரம்-

சினிமா அனுபவம்:

அதனால் ஒரு குழந்தையோடு கருத்தடை ஆபரேஷன் பண்ணிக்கலாம் என்று முடிவு செய்தோம். பின் வீட்டில் வற்புறுத்தியதால் இரண்டாவது குழந்தை பையன் பிறந்தான். ஆனால், அவன் எங்களை மாதிரி உயரம் கம்மியாக பிறந்து விட்டான். மேலும், சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த என் கணவர் கூட சேர்ந்து குடும்ப கஷ்டத்தை சமாளிக்க சினிமா, சீரியல்களில் நானும் நடிக்க ஆரம்பித்தேன். அப்போது பேரழகன் படத்தில் மாற்றுத்திறனாளியாக வேஷம் போட்டிருந்த சூர்யா சாரை என்னால் நம்பவே முடியவில்லை. அவருடன் சேர்ந்து நடிக்க நிஜமாகவே எனக்கு பயமாக இருந்தது.

பேரழகன் பட அனுபவம்:

அந்த படத்தில் என்னை கிண்டல் பண்றாங்க என்று தெரிந்தும் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம் அந்த படத்தில் கிடைக்கிற சம்பளமும் அதை வைத்து தான் என் பசங்களை வளர்க்க வேண்டிய கடமையும் அப்போது எனக்கு இருந்தது. படம் வெளியான பிறகு எங்க போனாலும் சினேகா என்று சொல்லித்தான் என்னை கூப்பிட்டார்கள். அந்த படத்திற்கு பிறகு சூர்யா சாரையும் பார்க்க முடியவில்லை. சில மாதங்களுக்கு முன்பு என் பையன் கல்யாணத்துக்கு அழைப்பிதழ் உடன் சூர்யா சாரை பார்க்க போனேன். அவர் வெளியூருக்கு போயிருந்தார். கொஞ்ச நாள் கழித்து அவர் சார்பாக தபால் வழியே ஐந்தாயிரம் ரூபாய் நிதி உதவி கிடைத்தது. அவரை நேரில் சந்தித்து பேச ஆசைப்படுகிறேன் அதற்கு யாருமே உதவவில்லை.

வறுமை குறித்து கற்பகம் கூறியது:

சினிமா தொழில் எங்கள் குடும்பத்தோட பசியை போக்க உதவியது. ஆனால், அந்த தொழில் இப்போ எங்களை கைவிட்டு விட்டது. நடிகர் சங்கமும், முன்னனி நடிகர்களும் கூட எங்களை கைவிட்டு விட்டார்கள். நலிந்த கலைஞர்களாக என் கணவரும் நானும் கலங்கி தவித்த போது இந்த துறையிலிருந்து யாருமே எங்களை கண்டு கொள்ளவில்லை. சராசரியான உயரத்துடன் உடல் வளர்ச்சியுடன் இருந்தால் மூட்டை தூக்கி பிழைத்துக் கொள்ளலாம். அதுக்கும் எங்களுக்கு குடுப்பினை இல்லை. என்னை ரொம்பவே விரக்திக்கு தள்ளியது. நடப்பது நடக்கட்டும் என்று வேறு வழியில்லாமல் இந்த துணி வியாபாரத்தை செய்து கொண்டிருக்கிறேன் என்று மனவேதனையில் கண்ணீரோடு கூறி இருக்கிறார்.

Advertisement