மேடையிலே அம்மாவை நினைத்து கண்கலங்கிய ப்ரியா பவானி சங்கர். அவங்க அம்மாக்கு அப்படி ஒரு நோயா?  

0
769
- Advertisement -

புற்றுநோய் பெற்ற ஆக்கப் போராடுபவர்களையும் அவர்களின் ஊக்குவிக்கும் வகையில் நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ப்ரியா பவானி சங்கர் தன்னுடைய தாயைப் பற்றி உருக்கமாக பேசினார். தமிழ் சினிமா உலகில் முன்னனி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். முதலில் இவர் செய்தி வாசிப்பாளராக தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். அதன் மூலம் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் நடித்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது. மேலும், இதன் மூலம் தான் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது.

-விளம்பரம்-

நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாதமான் என்ற படத்தின் மூலம் தான் ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து மிக பிரபலமானார் ப்ரியா பவானி சங்கர். அதனை தொடர்ந்து இவர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி, வெங்கடேசன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வெளிவந்த படம் தான் “மான்ஸ்டர்”. மான்ஸ்டர் திரைப்படம் வெளியாகி ஹிட் கொடுத்தது என்று சொல்லலாம். சமீபத்தில் ஹரிஷ் கல்யான், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் ஹாட் ஸ்டார் Ott தளத்தில் வெளியாகி இருந்தது.

- Advertisement -

பிரியா பவானி சங்கர் நடிக்கும் படங்கள்:

இந்த படத்தில் அபிஷேக் குமார், அன்புதாசன், அனிஷ் குருவில்லா, குக்கு வித் கோமாளி அஸ்வின், கே எஸ் ஜி வெங்கடேஷ் போன்ற பலர் நடித்து உள்ளார்கள். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது ப்ரியா பவானி சங்கர் அவர்கள் யானை, குருதி ஆட்டம், ருத்ரன், திருச்சிற்றம்பலம் போன்ற பல படங்களில் பிஸியாக நடித்து வந்து இளைஞசர்களின் கனவு கன்னியாக இருந்து வருகிறார்.

நிகழ்ச்சியில் கண்கலங்கிய நடிகை:

புற்றுநோய் பெற்ற ஆக்கப் போராடுபவர்களையும் அவர்களின் ஊக்குவிக்கும் வகையில் நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ப்ரியா பவானி சங்கர் தன்னுடைய தாயைப் பற்றி கூறுகையில் என்னுடைய அம்மாவுக்கு கடந்த வருடம் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த சமயத்தில் என்னையும் கேன்சர் பரிசோதனை செய்து கொள்ள சொன்னார்கள். என் அம்மாவை இழக்க விரும்பாத நான் அவர் விரைவில் குணமடைந்து விடுவார் என்று அவருக்கு நம்பிக்கை ஊட்டி வந்தேன்.

-விளம்பரம்-

கேன்சர் ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்டால் அதனை எளிதில் சரி செய்ய பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் மருத்துவரின் நம்புங்கள். என அங்கு வந்திருந்த கேன்சர் நோயாளிகளை நம்பிக்கை தெரிவித்தால். இந்த நிகழ்வு அங்கிருந்த பலரையும் கண்கலங்கள் செய்தது எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் அவரும் மனுஷன் தான் என்ற எண்ணம் அங்கிருந்து அவர்கள் பேசிக் கொண்டனர். மேலும் அவர் அங்கு வந்து இருந்த நோயாளிகளுக்கு ரோஜா பூவை கொடுத்தார். இது அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளக்கியது.

Advertisement