லோகேஷ் கனகராஜ் பக்கத்தில் அப்படி என்ன யோகா வீடியோக்கள் பதிவிடப்பட்டு இருந்தது தெரியுமா? இதோ வீடியோ ரெகார்ட.

0
559
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது மட்டும் இல்லாமல் கோடிக்கணக்கில் சம்பாதித்து சாதனை படைத்து வருகிறது. ஆரம்பத்தில் இவர் ஒரு தனியார் வங்கியில் தான் வேலை செய்து வந்தார். பின் இவர் சினிமா மீது இருந்த ஆசையால் தன்னுடைய திரை பயணத்தை “களம்” என்ற படத்தின் மூலம் தான் தொடங்கினார்.

-விளம்பரம்-

அதன் பின் இவர் “மாநகரம்” என்ற படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்சஸை கார்த்தி நடித்த “கைதி” படத்தின் மூலம் தொடங்கினார். அதற்கு பிறகு வந்த மாஸ்டர், விக்ரம் என பெரிய நடிகர்களை வைத்து பிரம்மாண்ட அளவில் ஹிட் கொடுத்துள்ளார் லோகேஷ். இதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ்.

- Advertisement -

லியோ படம்:

மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

படத்தின் வசூல்:

மேலும், இந்த படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதனை அடுத்து கடந்த மாதம் லியோ வெற்றியை சிறப்பாக செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் கொண்டாடி இருந்தது. சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வெற்றி விழாவை நடத்தி இருக்கிறார்கள். இந்த ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளி விஜயின் லியோ படம் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறது.

-விளம்பரம்-

சோசியல் மீடியாவில் லியோ படம்:

அதுமட்டுமில்லாமல் இந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் லியோ படம் தான் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. லியோ படம் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழிகளிலும் வெளியாகி டிரண்டிங்கில் இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படம் netflix otti-யில் வெளியானது. இன்னொரு பக்கம் சிலர் லியோ முழு படத்தையும் youtube-ல் வெளியிட்டு இருக்கிறார்கள். அதை அதிரடியாக நீக்கி விட்டார்கள். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் facebook பக்கத்தில் லியோ படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

நெட்டிசன்கள் விமர்சனம்:

தற்போது இந்த தகவல் தான் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இது லோகேஷ் கனகராஜ் தெரியுமா? என்றும் பலரும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். மேலும், லோகேஷ் கனகராஜ் உடைய facebook பக்கத்தை ஹேக் செய்து தான் இப்படி எல்லாம் செய்து இருப்பதாகவும், அவருடைய வங்கி கணக்கை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதைப் பார்த்து நெட்டிஷகள் பலரும் மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகிறார்கள். இதை அடுத்து லோகேஷ் கனகராஜ் அவர்கள் ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை இயக்க இருக்கிறார்.

Advertisement